தமிழ்நாடு

கரூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்- வெறிச்சொடி காணப்பட்ட இருக்கைகள்

குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.

கரூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்- வெறிச்சொடி காணப்பட்ட இருக்கைகள்
கரூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் இருக்கைகள் காலியாக வெறிச்சோடி காணப்பட்டது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 48வது வார்டு பகுதி மக்களுக்கு தான்தோன்றிமலை தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் குறிப்பிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மனுக்களை பெற தயாராக இருந்தபோதும் இந்த முகாமில் மனுக்களை அளிப்பதற்கு பொதுமக்கள் யாரும் வராததால் காலி இருக்கைகளாக வெறிச்சோடி காணப்பட்டது.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

இந்த முகாமில் குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று நேற்று வருவாய்த்துறை சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் அறிவித்திருந்த நிலையில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வருவாய்த்துறை சார்பில் எந்த ஒரு முகாம்களும் அமைக்கப்படவில்லை.

இருக்கைகள் வெறிச்சோடியது

திமுக அரசின் மிகப்பெரிய திட்டமாக நினைத்திருந்த வேளையில், அதற்கு பொதுமக்கள் ஆதரவு இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமின் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.