அறிவாலயத்தில் விற்பனைக்கு வந்த கருணாநிதி நாணயம்.. எத்தனை ரூபாய் தெரியுமா?

கலைஞர் கருணாநிதி உருவம் பதித்த ரூ.100 நாணயத்தின் விலை ரூ.10,000 என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரூபாய் பத்தாயிரம் கொடுத்து நாணயத்தை வாங்கி செல்கிறார்கள்.

Aug 20, 2024 - 15:26
Aug 21, 2024 - 10:16
 0
அறிவாலயத்தில் விற்பனைக்கு வந்த கருணாநிதி நாணயம்.. எத்தனை ரூபாய் தெரியுமா?
100 coin release

கலைஞர் கருணாநிதி உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் அறிவாலயத்திற்கு வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சென்று 100 ரூபாய் நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் திமுக நிர்வாகிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்கின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட அதனை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து கருணாநிதியை புகழ்ந்து பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங் எளியவர்களின் நலனுக்காக பாடுபட்டவர் கருணாநிதி என புகழ்ந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நாணயம் அறிவாலயத்திற்கு வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சென்று 100 ரூபாய் நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றார். 100 ரூபாய் நாணயம்தான், ஆனால் அதன் மதிப்பு 10,000 ரூபாய். மதிப்பே கிடையாது.

யார் வேண்டுமென்றாலும் 10,000 ரூபாய் கொடுத்து அறிவாலயத்தில் சென்று அதைப் பெற்றுக் கொள்ளலாம். ஏனென்றால், காந்தி நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் நான் 1 லட்சம் தருகிறேன் என்று சொன்னார். அவர் 1 லட்சம் என்ன, 10 லட்சம்கூட கொடுத்து வாங்கிக் கொள்வார் என்று கூறினார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்றைக்கு வருகை தந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கலைஞர் அவர்களுடைய நினைவிடத்தை போய் பார்க்கவேண்டும் என்று நாங்கள் கூட கேட்கவில்லை, பார்த்தே தீரவேண்டும் என்று அவரே கேட்டு, முழுமையாக அத்தனையும் பார்த்துவிட்டு இதுமாதிரி எங்கேயும் பார்த்ததில்லை என்று பாராட்டிவிட்டுச் சென்றார். அதற்கு பிறகு நிகழ்ச்சிக்கு வந்தார்.

வந்தவுடனே ஒரு பெரிய அதிர்ச்சியை எங்களுக்கெல்லாம் கொடுத்தார். இந்த அரங்கத்தில் இருக்கக்கூடிய அத்தனை பேரும் எழுந்து நின்று கலைஞருக்கு மரியாதை செலுத்துங்கள் என்று சொன்ன அந்த காட்சியை இன்றைக்கும் என்னால் மறக்கமுடியவில்லை. நேற்று இரவு முழுவதும், மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். 

கருணாநிதி நூற்றாண்டு  100 ரூபாய் நாணயம் தற்போது அறிவாலயத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.ஒரு நூறு ரூபாய் நாணயத்தின் விலை ரூ.10000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையிலும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரூபாய் பத்தாயிரம் கொடுத்து நாணயத்தை வாங்கி செல்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow