மது ஒழிப்பு மாநாடு.. திருமாவளவனுக்கு ஓகே சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. அடுத்தது என்ன?

நாங்கள் கூட்டணிக்காக இந்த கணக்கை போடவில்லை கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும் எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும் நாம் ஆனால் இந்த நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.தேசிய கொள்கைக்கு திமுக ஆதரவு வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தியுள்ளார் திருமாவளவன்.

Sep 16, 2024 - 12:28
 0
மது ஒழிப்பு மாநாடு.. திருமாவளவனுக்கு ஓகே சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. அடுத்தது என்ன?
vck tirumavalavan meets mk stalin

விசிக சார்பாக நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாடு குறித்து கோரிக்கை மனுவை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்த திருமாவளவன், இது பல லட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் கோரிக்கை என்று கூறினார். எங்கள் கருத்துடன் திமுக உடன்படுவதால் மாநாட்டில் பங்கேற்க தயாராக இருப்பதாக முதல்வர் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் திருமாவளவன்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். மஞ்சள் நிற பொன்னாடை போர்த்தி கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். கடந்த இரு நாட்களாக திமுக விசிக கூட்டணியில் விரிசல் பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் பேசிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்றைய தினம் சந்திப்பு அமைந்திருந்தது. 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுகவின் கொள்கையும் மது விலக்குதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததாக கூறினார். விசிக சார்பில் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறவுள்ள மதுவிலக்கு மாநாட்டில் ஆளும் திமுக தரப்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர்  பங்கேற்பர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாகவும் தெரிவித்தார். எங்களுடைய கொள்கையுடன் உடன்படுபவர்கள் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாம் என்றும் திருமாவளவன் அழைப்பு விடுத்தார். தேர்தல் கூட்டணியோடு இதனை முடிச்சிப் போட வேண்டாம் என்றும் திருமாவளவன் கூறினார்.  

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மதுவிலக்கு தொடர்பாக நடத்தப்படும் மாநாட்டின் நோக்கம் இரண்டு தேசிய கொள்கையை வரையறுக்க அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைக்க வேண்டும் மது கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்.தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று திமுகவும் சேர்ந்து வலியுறுத்த வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள் என்றார்.

முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், நாங்கள் கூட்டணிக்காக இந்த கணக்கை போடவில்லை கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும் எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும் நாம் ஆனால் இந்த நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சொன்னேன்.தேசிய  கொள்கைக்கு திமுக ஆதரவு வழங்க வேண்டும் என்று  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

எங்கள் மேடையில் தான் நின்று பேச வேண்டும் என்று இல்லை எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய அறைக்கூவல். பாமக மது ஒழிப்பில் குரல் கொடுக்கிறார்கள் எங்களோடு உடன்படுகிறார்கள் என்பதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. பாமக மீது எங்களுக்கு வேறு எந்த விமர்சனமும் இல்லை என்று விசிக திருமாவளவன் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow