அமெரிக்க அதிபர் தேர்தல்.. நீயா நானா கோதாவில் கமலா ஹாரிஸ் - டிரம்ப்.. அனல் பறந்த விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு மேல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பேசும் போது, கோடீஸ்வரர்களுக்கு ஆதரவாக சலுகைகள டிரம்ப் அள்ளி வழங்கியதாக குற்றம் சாட்டினார்.

Sep 11, 2024 - 09:58
 0
அமெரிக்க அதிபர் தேர்தல்.. நீயா நானா கோதாவில் கமலா ஹாரிஸ் - டிரம்ப்.. அனல் பறந்த விவாதம்
kamala trump debate high lights

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு மேல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பேசும் போது, கோடீஸ்வரர்களுக்கு ஆதரவாக சலுகைகள டிரம்ப் அள்ளி வழங்கியதாக 
குற்றம் சாட்டினார். 

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர்  தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போது அமெரிக்காவை ஆளும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இருவரும் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான நேரடி விவாதத்தில் இன்று பங்கேற்றனர். 

பென்சில்வேனியா மாகாணம் ஃபிலடெல்ஃபியா நகரில் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் நேரடி விவாதம் தொடங்கியது.  தொடக்கத்தில், ஹாரிஸ் மற்றும் டிரம்ப் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இருவருமே கைகுலுக்கினர். இதன் மூலம் அதிபர் தேர்தல் விவாத மேடையில் கைகுலுக்கல் இல்லாத எட்டு வருட தொடர் நிகழ்வுகள் முடிவுக்கு வந்துள்ளது.

விவாதத்தில் பேசிய கமலா ஹாரிஸ், நாட்டை வழிநடத்துவதற்கான சிறந்த திட்டங்கள் என்னிடமே உள்ளன. பணக்காரர்களுக்கு மட்டுமே டிரம்ப் வரிச்சலுகை கொடுத்தார். டிரம்ப் ஆட்சியில் இருந்து செல்லும் போது வேலைவாய்ப்பின்மை மோசமாக இருந்தது. டிரம்ப் ஆட்சியில் செய்த தவறுகளை சரிசெய்யவே 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. 

மக்களுக்கான எந்த திட்டமும் டிரம்பிடம் இல்லை. சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டு அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினார்.டிரம்பின் ப்ராஜக்ட் 2025 திட்டம் மிகவும் ஆபத்தானது. 21ஆம் நூற்றாண்டிலும், அமெரிக்கா தான் முன்னிலையில் இருக்கும். சீன அதிபருக்கு நன்றி தெரிவித்து, டிரம்ப் டுவிட் செய்திருந்தார். 

டிரம்பால் கொண்டுவரப்பட்ட கருக்கலைப்புக்கு எதிராக 20 மாகாணங்களில் சட்டங்கள் உள்ளன. டிரம்பால் கொண்டுவரப்பட்ட கருக்கலைப்புக்கு எதிராக 20 மாகாணங்களில் சட்டங்கள் உள்ளன. ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையை அரசு நிர்ணயிக்க கூடாது. பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று டிரம்ப் கூற கூடாது. 

பெண்களின் உடல் மீது அவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. நெருக்கடியான இந்த காலகட்டத்தில், மக்களுக்கு சரியான தலைவர் தேவை. மக்களின் 
பிரச்சினைகள், கனவுகள் பற்றி டிரம்ப் பேசவே மாட்டார் என்று அனல் பறக்க பேசினார். 


டிரம்ப் பேசும் போது, சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் இங்குள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவை உலகின் சிறந்த பொருளாதார நாடாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். சீன பொருட்கள் மீது வரிகளை சுமத்தி அரசுக்கு வருவாய் ஈட்டினோம். எனக்கும் ப்ராஜக்ட் 2025 திட்டத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. கொரோனா பெருந்தொற்றை மிக சிறப்பாக கையாண்டோம். 

என்னுடைய ஆட்சியில் பண வீக்கம் மிகவும் குறைவாக இருந்தது. பைடன் ஆட்சியில் பணவீக்கத்தால் மக்கள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறிய  டிரம்ப் ஒரு கட்டத்தில், தனிப்பட்ட தாக்குதலுக்கு மாறினார். "கமலா ஹாரிஸ் ஒரு மார்க்சிஸ்ட். அவருடைய தந்தை ஒரு மார்க்சிஸ்ட்" என்று கடுமையாக பேசினார். அப்போது ஹாரிஸ் முழுவதும் சிரித்துக்கொண்டே எதிர்கொண்டார்.

அவரிடம் எந்த திட்டமும் இல்லை.மிக மோசமான குடியேற்ற கொள்கையால் அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கருக்கலைப்பு தொடர்பாக மிக ஆபத்தான கருத்துகளை கூறியவர்கள் ஜனநாயக கட்சியினர். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். 

வங்கி கடன் ரத்து என மாணவர்களை பைடன் ஏமாற்றினார். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். முக்கிய விஷயங்களில் ஜனநாயக கட்சி இரட்டை நிலைப்பாடு எடுத்தது . செயற்கை கருத்தரிப்புக்கு நான் எதிரானவன் அல்ல. எனது பிரசார கூட்டங்களில் இருந்து யாரும் வெளியேறுவது இல்லை. அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் 3ஆம் உலகப்போர் உருவாகும் என்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

கமலா ஹாரிஸுக்கு ஏற்கனவே ஒபாமா, அதிபா் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோரின் பலரது ஆதரவும் இருந்து வரும்நிலையில், கமலா ஹாரிஸுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். அதிபர்த தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் அதிபர் நாற்காலியில் மீண்டும் டிரம்ப் அமர்வாரா? அல்லது அமெரிக்காவின்  முதல் பெண் அதிபராகும் வாய்ப்பு கமலா ஹாரிஸ்க்கு கிடைக்குமா? பெண் என்பதாலேயே கமலா ஹாரிஸுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் சில பின்னடைவுகள் ஏற்படும் என்று சிலர் கணிக்கின்றனர். 

அமெரிக்கா சுதந்திரம் பெற்ற 248 ஆண்டுகளில் இதுவரை ஒரு பெண் கூட நாட்டின் அதிபராகவில்லை. தனியுரிமைக்கும் பெண்ணுரிமைக்குமான குரல்கள் ஊற்றெடுக்கும் நாடாக இருந்தும் கூட இதுதான் நிலையாக இருக்கின்றது. கமலா ஹாரிஸ்க்கு அதிர்ஷ்டமும் மக்களின் செல்வாக்கும் கிடைக்குமா பார்க்கலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow