உயர் கல்வித் துறையில், தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது.. அமைச்சர் கோவி. செழியன்..!
உயர் கல்வித் துறையில், தமிழ்நாடு முதல் மாநிலமாக இருப்பதை சீர்குலைக்க தமிழக ஆளுநர் முயற்சி செய்வதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் குற்றம் சாட்டியுள்ளார்.
உயர் கல்வித் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை எட்டியுள்ளோம் இதை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தமிழக ஆளுநர் தொடர்ந்து உயர்கல்வி துறையின் பணியில் குறுக்கிட்டு இடர்பாடு உருவாக்க வேண்டும் என்பதற்காக கருத்து தெரிவித்து வருகிறார் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்க கூடிய தேடுதல் குழுவில் மூன்று நபர்களை முறையாக சரியாக அரசின் விதிப்படியும் பல்கலைக்கழகத்தின் விதிப்படியுப் தான் நியமித்தோம்.
இதுவரை தமிழ்நாடு முதலமைச்சர் மாநில உரிமைகளை கட்டி காப்பதில் ஒன்றிய அரசோடு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றுபட்டு இந்தியாவை உருவாக்கி பல்வேறு மாநிலங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
உயர்கல்வியை பொருத்தவரை பல்கலைக்கழகங்களுடைய செயல்பாடு தமிழ்நாடு அரசு விரும்பி பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவர்கள் நலன் காப்பதில் அக்கறையுடன் முதலமைச்சர் செயல்படுகிறார்.
திமுக அரசு அமையும் போதெல்லாம் உயர் கல்வித் துறையில் அக்கரை காட்டிய காரணத்தினால் தான் கலைஞர் கருணாநிதி காலத்திலிருந்து இன்று வரை உயர் கல்வித் துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை எட்டியுள்ளோம். இதை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஆளுநர் தொடர்ந்து உயர்கல்வி துறையின் பணியில் அரசின் பணியில் குறுக்கிட்டு இடர்பாடு உருவாக்க வேண்டும் என்பதற்காக கருத்து தெரிவித்து வருகிறார்.
தமிழ்நாடு அரசை பொருத்தவரை ஆளுநரின் குறுக்கீடுகளை அவ்வப்போது அறிக்கையின் மூலமாக நாங்கள் அனுப்புகின்ற கோப்புகளின் மூலமாகவும் நிரூபித்து வருகிறோம். இதன் பிறகு ஆளுநர் தன் நிலையை தொடர்ந்தால் தமிழ்நாடு முதலமைச்சருடன் கலந்து பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் சட்ட ரீதியான அவரது செயல்பாடுகளை வரையறுக்க வேண்டிய நிலை தமிழ்நாடு அரசுக்கு வரும் அந்த கட்டத்தை அவர் எட்டாமல் இருப்பது அவர் பதவிக்கு அழகு என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டை திருச்சி, கோவை, சென்னை, மதுரை என நான்கு மண்டலங்களாக பிரித்து அனைத்து நிலையிலான துறை தலைவர்கள், பேராசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் பல்கலைக்கழகத்துடைய சிறப்பு கல்வி வல்லுனர்கள் பொறியியல் கல்லூரியுடைய சிறப்பு வல்லுநர்கள் பேராசிரியர்கள் நான் டீச்சிங் ஸ்டாஃப், பெற்றோர்கள், விடுதி மாணவர்கள் 7.5% படிக்கக்கூடிய மாணவர்கள், நான் முதல்வன் திட்டத்தில் படிக்கக்கூடிய மாணவர்கள், புதுமைப்பெண் திட்டத்தில் படிக்கக்கூடிய மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், தமிழ் புதல்வன் மாணவர்கள், என ஒவ்வொரு பிரிவாக நாள் முழுவதும் உயர்கல்வி துறை செயலாளர்கள் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகளோடு நானே உடனிருந்து மாநிலம் முழுவதும் கோரிக்கைகளை பெற்று வந்திருக்கின்றோம்.
அந்த அடிப்படையில் புதிய கல்வி திட்டங்கள் சேர்க்கப்பட வேண்டும் பயனற்ற கல்வி திட்டங்கள் நீக்கப்பட வேண்டும் வேலை வாய்ப்பு கூறிய புதிய பாட முறைகள் புகுத்தப்பட வேண்டும் என்பது எல்லாம் நாங்கள் கள ஆய்வு செய்யும் பொழுது கண்டறிந்துள்ளோம் அதையெல்லாம் முதல் அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி வரும் கல்வி ஆண்டில் புதுத்துறைகளை உருவாக்குவது வேலைவாய்ப்புகளை ஊக்கப்படுத்துவது வெளிநாட்டில் இருக்கக்கூடிய நிறுவனங்களோடு இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி தந்து வேலை தருவது முதலமைச்சருடைய நோக்கம் எண்ணம் எல்லாம் இந்தியாவில் இருக்கக்கூடிய பிற மாநிலங்களை தமிழ்நாடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உத்திர பிரதேசம், பீகார் என்று அகில இந்தியாவில் உலக அளவில் இருக்கின்ற நாடுகளோடு ஒப்பிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீனா, ஜப்பான், தைவானை போல் எட்டக்கூடிய சூழ்நிலையை உருவாக்க பெரு முயற்சி எடுத்து வருகிறோம் அதற்கான கல்வி திட்டம் உருவாக்கப்படும். கல்லூரியுடைய பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு நலம் பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் 2,000 கௌரவ விரிவுரையாளர்களை நியமித்துள்ளார். அடுத்து 750 பேருக்கு மேலாக கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க இருக்கின்றோம். அதைத்தொடர்ந்து வரும் ஜூன் மாதத்திற்குள் நான்காயிரம் பணியிடங்கள் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு நிரந்தர பேராசிரியர்களை உருவாக்கக்கூடிய பெரு முயற்சியையும் எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு அதிமுக ஊதியத்தொகை 10,000 ரூபாய் மட்டுமே கூடுதலாக கொடுத்தார்கள். குறிப்பாக பத்தாயிரம் வாங்கியவர்களுக்கு 20,000 ரூபாயாக உயர்த்தினர். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளுக்கு உள்ளாகவே 5,000 ரூபாயை உயர்த்தி வழங்கி உள்ளார். இதன் மூலம் அரசுக்கு பல பணச்சுமை கூடுதல் செலவு இருந்தாலும் கூட பேராசிரியர்கள் நலம் காப்பதில் அக்கறையுடன் இருக்கக்கூடிய முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர்.
பத்தாண்டுகளில் அதிமுக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தது அதை ஒன்றரை ஆண்டுகளில் 5000 ரூபாயை விருத்தியுள்ளார் இதுவே பேராசிரியர்கள் மீது முதலமைச்சர் காட்டுகின்ற அக்கறை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?