அபுதாபி இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின்-முகமது-பின் சயீத் அல் நஹ்யான் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தார்.

Sep 9, 2024 - 14:45
Sep 9, 2024 - 19:15
 0
அபுதாபி இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு  இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை
pm modi meets abu dhabi crown prince

2 நாட்கள் அரசுமுறை பயணமாக அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இன்று ( செப்டம்பர் 9) இந்தியா வந்துள்ளார். 
அபுதாபி பட்டத்து இளவரசருடன் அந்நாட்டின் அமைச்சர்களும், வர்த்தகப் பிரதிநிதிகளும் வருகை தந்துள்ளனர்.அவரை  ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தார்.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையே நீண்ட கால வர்த்தக உறவு நீடித்து வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி முதல் முறை ஆட்சிக்கு வந்தது முதல் இருநாடுகள் இடையேயும் பொருளாதாரம் மற்றும் வணிக செயல்பாடுகள் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளது. 

அபுதாபியின் பட்டத்து இளவரசராக மேதகு ஷேக் காலித் பின் முகமது பின் ஜாயித் அல் நஹ்யா பதவியேற்ற பிறகு நிர்வாக பணிகள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இதற்கிடையே பிரதமர் மோடி, அபுதாபி இளவரசரை இந்தியாவுக்கும் வரும்படி அண்மையில் அழைப்பு விடுத்து இருந்தார்.

தொடர்ந்து வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான நட்பை வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அபுதாபி பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ஷேக் காலித் பின் முகம்மது பின் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இந்தியாவுக்கு வருகை 
தந்துள்ளார். அபுதாபி பட்டத்து இளவரசருடன் அந்நாட்டின் அமைச்சர்களும், வர்த்தகப் பிரதிநிதிகளும் வருகை தந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow