மயிலாப்பூரில் இரும்பு சாரம் உடைந்து ஒருவர் காயம்.. 3 கார்கள் சேதம்..!
சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் கட்டுமான பணி நடைபெற்று வரக்கூடிய இடத்தில் சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், 3 கார்கள் சேதமடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள வணிக வளாகத்தினை புதுப்பிக்கும் பணியின் போது, அருண் இன்டீரியர்ஸ் என்கின்ற நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சார கம்பிகள் திடீரென அறுந்து சாலையில் விழுந்ததில், ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், 3 கார்கள் சேதமடைந்தது.
சென்னை மயிலாப்பூர் ராதா கிருஷ்ணன் சாலையில் மூன்று மாடி கொண்ட டவுளானி டவர்ஸ் வணிக வளாக கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் கண்ணாடிக் கடை, துணிக்கடை உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.
பழமையான கட்டிடம் என்பதால் கடந்த ஒரு வாரகாலமாக கட்டிடத்தில் இரும்பு சாரம் அமைத்து மறு சீரமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இன்று திடீரென கட்டிடத்தில் இருந்த ராட்சத சாரம் அறுந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்துள்ளது.
இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், கட்டிடத்தின் கீழே கடைக்கு சென்ற போது நிறுத்தி வைத்திருந்த மூன்று கார்கள் முழுவதுமாக சேதமடைந்தது. யாரும் கட்டிடத்தின் கீழே நிற்காததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக இது குறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். லேசான காயமடைந்த இருசக்கர வாகன ஓட்டிக்கு சிகிச்சை அளித்தனர். இதனையடுத்து மாநகராட்சிக்கு போலீசார் தகவல் அளித்த நிலையில் அவர்கள் சரிந்து விழுந்த சாரத்தை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவல்லிக்கேணியிலிருந்து இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றதாகவும், திடீரென சாரம் சரிந்து விழுந்த போது சுதாரித்து கொண்டதால் ஜெகதீஷ் காயம் அடைந்ததாக தெரிய வந்துள்ளது. வங்கிக்கு வந்த போது காரை பார்க்கிங் செய்துவிட்டு சென்ற போது விபத்து ஏற்பட்டு தனது கார் சேதமடைந்ததாகவும், எந்த விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் அஜாக்கிரதையாக சாரம் அமைக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் அஜாக்கிரதையாக சாரம் கட்டி பணியில் ஈடுபட்ட காண்ட்ராக்டரையும், கட்டிட உரிமையாளரிடமும் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முறையாக மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி அடுத்தக்கட்டமாக வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வழியே சென்றிருந்த இருசக்கர வாகன ஒட்டி ஜெகதீஷ் என்பவருக்கு காலில் சிறிய காயங்களும் அதே கட்டிடத்தில் அமைக்கப்பட்டு இருந்த கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்களின் மூன்று கார்களும் சேதம் அடைந்துள்ளது மேலும் மயிலாப்பூர் போக்குவரத்து காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அருண் இன்டீரியர் நிறுவனத்திடம் முறையிட்டு தற்போது அந்த கம்பிகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
What's Your Reaction?