K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

அடக்கு முறையால் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர முடியாது.. தமிழிசை கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்ததற்கு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. அனைவரும் வெட்கப்பட வேண்டும்.. நீதிபதி வேதனை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அனைவரும் வெட்கபட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

தனக்கு எந்த அரசியல் பின்புலமும் இல்லை.. யூடியூபர் இர்ஃபான் விளக்கம்

யூடியூபர் இர்ஃபானுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை என்று பலர் விமர்சித்து வந்த நிலையில் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இர்ஃபான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சென்னை மலர் கண்காட்சி.. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் நான்காவது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாமக.. செளமியா அன்புமணி அதிரடி கைது

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திட்டமிட்டபடி பள்ளிகள் இன்று திறப்பு.. உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னை கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

அரையாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு.. பள்ளி திறப்பது தள்ளிப் போகிறதா?

அரையாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

திமுக அரசை எதிர்த்து யாரும் பேச கூடாதா..? முதல்வர் பதில் கூற வேண்டும்.. சசிகலா

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுகவிற்கு சம்பந்தம் இருக்கும் என பலரும் கூறுகிறார்கள். இதற்கான பதிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டாயமாக கூற வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

10-ஆம் வகுப்பு மாணவனுடன் 22 வயது இளம்பெண் காதல்.. போக்சோ சட்டத்தில் இருவர் கைது

பள்ளி மாணவனை பாண்டிச்சேரிக்கு அழைத்து சென்ற இளம்பெண் உள்பட 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம்.. பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள்.. 242 வாகனங்கள் பறிமுதல்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட 242 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

புத்தாண்டின் போது நடந்த அதிர்ச்சி.. ரவுடி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு

சென்னையில் நேற்று ரவுடி வீட்டின் முன்பு மற்றொரு ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து டயருக்கு அடியில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு.. ஓட்டுநர் கைது

சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்த நிலையில் பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

இரட்டை இலை விவகாரம் : தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் ஓ.பி.எஸ்..!

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

New Year 2025: அரசியல் தலைவர்களின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்..!

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கும், தங்களது தொண்டர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதல்வர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். 

ஆங்கில புத்​தாண்டு.. கோயில்​கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தரகள் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில்,  சென்னை சாந்தோம் கிறிஸ்துவ தேவாலயத்தில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. 

சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம்...!

புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள் திரண்ட நிலையில், மேகமூட்டத்தால் சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

பிறந்தது 2025  - கோவையில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்...!

உலகம் முழுவதும் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நிறைவு அடைந்து 2025 ஆம் ஆண்டு பிறந்து உள்ளது.

சென்னையில் மலர் கண்காட்சி.. ஜனவரி 2-ஆம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

ஜனவரி 2-ஆம் தேதி  முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ள சென்னை மலர் கண்காட்சியினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

திமுக நடத்தினால் போராட்டம் நாதக நடத்தினால் நாடகமா..? சீமான் விமர்சனம்

திமுக ஆட்சியையும் காவல்துறை அதிகாரி வருண் குமாரையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.

மலைப்பாம்பு விவகாரம்.. டிடிஎப் வாசன் தரப்பில் விளக்கம்

மலைப்பாம்பை கையில் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த வீடியோ வெளியானது குறித்து டிடிஎஃப் வாசன் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. மதுரை to சென்னை நீதிப்பேரணி.. அண்ணாமலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மகளிர் அணி சார்பில் பேரணி நடைபெறவுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

புத்தாண்டு விதிகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை

புத்தாண்டு விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வழக்கில் பெண் உட்பட 8 பேர் கைது.. 17  கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை வழக்கில் பெண் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை.. காரணம் இதுதான்

சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.