தமிழ்நாடு

போதை மருந்து நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள்...அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

போதை மருந்து நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள்...அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பறக்கும் படை உருவாக்கப்படும்

தமிழக சட்டப்பேரவை 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று(ஏப்.21) மீண்டும் கூடியது. சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். மேலும் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்கவும், போதைப்பொருள் புழக்கத்தை கண்காணிக்கவும் மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை

மேலும் அரசு மருத்துவமனைகளில் புதிதாக 25 போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் ரூ.29.67 கோடியில் மருத்துவ சாதனங்கள் சோதனைக்கூடம் நிறுவப்படும்.

4வது பொது சுகாதார சர்வதேச மாநாடு சேலத்தில் நடத்தப்படும்.எச்.ஐ.வியால் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.