தமிழ்நாடு

31 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய முன்னாள் கடற்படை ஊழியர்...நண்பனின் மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் நடவடிக்கை

அரக்கோணத்தில் குடும்ப தகராறில் நண்பனின் மனைவியை உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் 31 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முன்னாள் கடற்படை ஊழியர் கைது

 31 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய முன்னாள் கடற்படை ஊழியர்...நண்பனின் மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் நடவடிக்கை
கைது செய்யப்பட்ட நபர்
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சவுத்ரி. இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார் . இவரது மனைவி ஜெயஸ்ரீ இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது.இதில் மன உளைச்சலுக்கு ஆளான சவுத்ரி மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். இதுகுறித்து கேரள மாநிலம் கொச்சி கடற்படையில் பணியாற்றி வரும் ஊழியர் நண்பரான பாஸ்கர் ஜோதி கோகாய் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் நண்பருடன் சேர்ந்து மனைவியை வீட்டில் மண்ணெண்ணை ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்தார் . அரக்கோணம் டவுன் போலீசில் ஜெயஸ்ரீ தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் அவர் எரித்து கொலை செய்யப்பட்டது என மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிந்தது. இதையடுத்து சவுத்ரியை 2005ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். அவருக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

31 ஆண்டுகளுக்கு பின் கைது

இந்நிலையில் இன்னொரு குற்றவாளியான பாஸ்கர் ஜோதி கோகாய் வழக்கில் இருந்து தலைமறைவாக இருந்தார். இந்த வழக்கு தற்போது வரை கிடப்பில் இருந்த நிலையில் அவரை பிடிக்க அரக்கோணம் டிஎஸ்பி ஜாபர் சித்திக் உத்தரவின்பேரில் டவுன் போலீசார் அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் சென்றனர். அங்கு பாஸ்கர் ஜோதி கோகாய் என்ற பெயரில் உள்ளவர்களின் வாக்காளர் பட்டியல் திரட்டப்பட்டது. இதில் 15 லட்சம் வாக்காளர்கள் பெயர்களை தொடர் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் பாஸ்கர் ஜோதி கோகாய் அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் டியூஷன் ஆசிரியராக பணியாற்றி வருவது தெரிந்தது .ஆனால் அவருடைய 21 வயது புகைப்படம் கொண்டு எப்படி தேடுவது என்று நினைத்த போலீசார் அவருடைய படத்தை AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படம் வரைந்து அதன் மூலம் அவரை அங்கு சென்று கைது செய்தனர். பின்னர் அஸ்ஸாம் மாநில திப்ரூகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரக்கோணத்திற்கு அழைத்து வந்தனர்.

விசாரணை

கடற்படை ஊழியரின் மனைவியை எரித்துக் கொலை செய்த வழக்கில் 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் ஏ ஐ (AI) தொழில்நுட்பத்துடன் படம் வரைந்து பல்வேறு விசாரணைக்கு பின்னர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.