தமிழ்நாடு

ஒரே பைக்கில் 7 பேர் சாகச பயணம்...இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ...நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் ஏழு பேர் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 ஒரே பைக்கில் 7 பேர் சாகச பயணம்...இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ...நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஒரே பைக்கில் 7 மாணவர்கள் பயணம்
ஒரே பைக்கில் 7 பேர் பயணம்

ரீல்ஸ் மோகம் உள்ளிட்டவைகளுக்காகவும், லைக் மற்றும் ஃபாலோக்களுக்காக இளைஞர்கள், சிறுவர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடும் வீடியோக்களை தங்கள் இணைய பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலைகளில் பைக் வீலிங் செய்வது போன்ற செயல்களை செய்து சிக்குகின்றனர். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பைக் சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது அம்மாவட்டங்களை சேர்ந்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 10 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி இறுதி ஆண்டு தேர்வு முடிந்த நிலையில், 8ம் வகுப்பு 9ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் பள்ளி மாணவர்கள் சீருடையில் ஏழு பேர் பயணித்தனர். இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பள்ளி சிறுவர்கள் ஒரே வாகனத்தில் ஏழு பேர் சாகசம் செய்யும் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. பள்ளியில் மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.