தமிழ்நாடு

பரத நாட்டியமா? குச்சிப்புடி ஆட்டமா? சீமானை கிண்டல் செய்த நடிகை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து நடிகை வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பரத நாட்டியமா? குச்சிப்புடி ஆட்டமா? சீமானை கிண்டல் செய்த நடிகை
பரத நாட்டியமா? குச்சிப்புடி ஆட்டமா? சீமானை கிண்டல் செய்த நடிகை
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். நடிகை மற்றும் காவல் அதிகாரி வருண் குமார் வழக்கு தொடர்பாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார். தற்போது, 2026-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறார். நாம் தமிழர் கட்சி உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் செயலில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்.

மேலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வது, அறிவிப்பது தொடர்பாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சீமானை விமர்சித்து நடிகை வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “மனசாட்சி என்பது கொஞ்சமாவது சீமானுக்கு இருக்கா? என்று மக்கள் பாருங்கள். தமிழ்நாடு காவல்துறை சீமானை விசாரணைக்காக அழைத்த போது அதை நேர்மறையாக கையாள தெரியாமல் அச்சத்தில் உச்ச நீதிமன்றதில் இடைக்கால தடை வாங்கினார்.

நடிகை விமர்சனம்

என்ன ஆட்டம் ஆட போறீங்க சீமான். பரத நாட்டியமா? அல்லது குச்சுப்புடியா? அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அங்கு உனக்கும் எனக்கும் பரதநாட்டியம் போட்டியா வைத்திருக்கிறார்கள். பெங்களூரில் இருந்து கொலுசு வாங்கி அனுப்புகிறேன். என்னை எப்போது பாலியல் தொழிலாளி என கூறினாயோ, அன்னைக்கே உன்னோட அரசியல் வாழ்க்கை முடிந்தது.

நீ போட்ட ஆட்டத்தை உலகமே பார்த்துவிட்டது. தேர்தல் வரும்போது பாரு, மக்கள் துப்பிவிட்டு செல்வார்கள்" என நடிகை ஆவேசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.