இந்தியா

போப் பிரான்சிஸ் மறைவு.. இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

போப் பிரான்சிஸ் மறைவு.. இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
போப் பிரான்சிஸ் மறைவு.. இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 2013-ம் ஆண்டு போப் ஆண்டவராக பதவியேற்றார்.

26-வது பெனடிக்ட் பதவி விலகியதைத் தொடர்ந்து பிரான்சிஸ் போப் ஆண்டவர் ஆனார். 266-வது திருத்தந்தையாக இருந்த போப் பிரான்சிஸ், வாடிகன் அலுவலங்களில் பெண்கள் பணியாற்ற அனுமதித்தல், தன்பால் ஈர்ப்பு இணையர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

தீராத நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்த போப் பிரான்ஸ், ஈஸ்டர் திங்கள் அன்று உயிரிழந்ததாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மறைந்த போஸ் பிரான்சிஸிற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

துக்கம் அனுசரிப்பு

இந்நிலையில், போப் பிரான்சிஸிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று மற்றும் நாளை நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளதாகவும், போப் பிரான்சிஸ் இறுதி சடங்கின் போது ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதால் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் இந்த நாட்களில் எந்தவிதமான அரசு நிகழ்ச்சிகளும் இருக்காது எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.