தமிழ்நாடு

கூலி தொழிலாளியை தாக்கிய விவகாரம்: பாஜக பிரமுகரை தட்டி தூக்கிய போலீசார்

கூலி தொழிலாளியை தாக்கிய விவகாரத்தில் பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கூலி தொழிலாளியை தாக்கிய விவகாரம்: பாஜக பிரமுகரை தட்டி தூக்கிய போலீசார்
கூலி தொழிலாளியை தாக்கிய விவகாரம்: பாஜக பிரமுகரை தட்டி தூக்கிய போலீசார்
சென்னை கே.கே.நகர் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் குட்டி. இவர் கே.கே.நகர் அய்யாபுரம் பகுதியைச் சேர்ந்த பாரத மாதா விநாயகர் சதுர்த்தி விழா குழு மாநில தலைவரும், பாஜக பிரமுகருமான ராமலிங்கம் என்பவரிடம் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.

ராமலிங்கம் தன்னிடம் வேலை செய்யும் அன்பழகன் குட்டியை கே.கே.நகர் ராஜமன்னார் சாலை ஆர்டிஓ மைதானம் எதிரில் உள்ள டீக்கடைக்கு அழைத்து வந்து டீ குடிக்குமாறு கூறியுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த அன்பழகன் குட்டி, ராமலிங்கத்திடம் வேலை செய்ததற்கான 500 ரூபாயை கேட்டுள்ளார்.

ராமலிங்கம் பணத்தை தர மறுக்கவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆத்திரமடைந்த ராமலிங்கம், அன்பழகன் குட்டியை டீ கடையில் இருந்த பித்தளை ஜக்கை எடுத்து தலையில் அடித்துள்ளார். இதில் காயமடைந்த அன்பழகன் குட்டி, கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

பிறகு நடந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் பாஜக பிரமுகர் ராமலிங்கம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். முன்னதாக தன்னை தாக்கிய அன்பழகன் குட்டி மீது நடவடிக்கை எடுக்ககோரி ராமலிங்கம் புகார் கொடுத்துள்ளார்.

கைதான ராமலிங்கத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மே 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமலிங்கம் மீது ஏற்கனவே கே.கே.நகர் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.