தமிழ்நாடு

Gold rate: கனவாகும் தங்கம்.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 உயர்வு!

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்துள்ளதால் மக்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.

Gold rate: கனவாகும் தங்கம்.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 உயர்வு!
Gold rate: கனவாகும் தங்கம்.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 உயர்வு!
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை பேரதிர்ச்சியை தரும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை சட்டென உயர்ந்து 70,000 ரூபாயை கடந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில், தற்போது 75 ஆயிரத்தை நெருங்கி இனி மேல் தங்கமே வாங்க முடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கால கட்டம் வரை நடுத்தர மக்களும் தங்கம் வாங்கும் அளவிற்கு அதன் விலை இருந்தது.

ஆனால், கடந்த சில நாட்களாக நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது குறித்து நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதன் விலை எகிறி கொண்டே வருகிறது. இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

சென்னையில் தங்கத்தின் விலை

சென்னையில் நேற்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.9,015-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.72,120-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,11,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரப்படி, தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,200 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.275 அதிகரித்து ரூ. 9,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ. 2,200 அதிகரித்து ரூ. 74,320-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையானது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமுமில்லை. 1 கிராம் வெள்ளி ரூ.111 ஆகவும் ஒரு கிலோ ரூ. 1,11,000-ஆகவும் விற்பனையாகிறது.