தமிழ்நாடு

மாநில கல்லூரியில் போராட்டம்.. கெளரவ விரிவுரையாளர்கள் மீது வழக்கு பதிவு!

மாநிலக் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளர்கள் 254 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாநில கல்லூரியில் போராட்டம்.. கெளரவ விரிவுரையாளர்கள் மீது வழக்கு பதிவு!
மாநில கல்லூரியில் போராட்டம்.. கெளரவ விரிவுரையாளர்கள் மீது வழக்கு பதிவு!
சென்னை மெரினா காமராஜ் சாலையில் அமைந்துள்ள மாநில கல்லூரியில் 200 க்கும் மேற்பட்டோர் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கௌரவ விரிவுரையாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர் மாநில கல்லூரி வளாகத்தில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்பாக கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு, தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளர்கள் திடீரென அனுமதியின்றி கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்றதால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அண்ணா சதுக்கம் போலீசார் அனுமதி இன்றி பேரணி செல்ல முயன்ற 72 பெண் கௌரவ விரிவுரையாளர்கள் 182 ஆண் கௌரவ விரிவுரையாளர்கள் உட்பட 254 கௌரவ விரிவுரையாளர்கள் மீது சென்னை மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.