"நீட்டா விஷ்ணு ஆர்கானிக்" என்ற பெயரில் இயற்கை அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனத்தை நடத்தி வருபவர் விஷ்ணு. இவர் instagram influencer ஆகவும் விஷ்ணு பொலிட்டிக்கல் லென்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். தமிழக வெற்றி கழக ஆதரவாளராக தொடர்ந்து வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். அது மட்டும் அல்லாது அய்யப்பன் பக்தி பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் வீட்டின் ஒன்றில் instagram influencer ஆன விஷ்ணு தாக்கப்பட்டு மிரட்டப்படும் காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. அதில் விஷ்ணு பார்ட்டிகளில் கலந்து கொள்வது தெரிய வந்துள்ளது. அதில் பழக்கமான நண்பர்களில் ஒருவரின் தங்கைக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்புடைய பெண் அவரது அண்ணனிடம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தெரியாமல் விஷ்ணு அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு காத்திருந்த பெண்ணின் சகோதரர் மற்றும் நண்பர்கள் விஷ்ணுவை முட்டி போட வைத்து தாக்கி விரட்டியது தெரியவந்துள்ளது.
அவருடைய செல்போனை பறித்து ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியது குறித்தும் அவர் யார் யாருக்கெல்லாம் குறுஞ்செய்தி அனுப்புகிறார் என்பது குறித்தும் வீடியோ வெளியிட்ட அப்பெண்ணின் அண்ணன்கள் விஷ்ணுவிற்கு மரண அடி கொடுத்துள்ளனர். திருமணம் ஆகியும் கர்ப்பமான மனைவி இருக்கும் போது இவ்வாறு செயல்படுவது குறித்து கேள்விகளை எழுப்பி விஷ்ணுவை மிரள வைத்துள்ளனர்.
அது மட்டுமல்லாது பெண்ணின் வீட்டிற்கு வந்த instagram இன்ஃப்ளுயன்சர் விஷ்ணு ஆணுறையுடன் வந்ததையும் அண்ணன்மார்கள் கேள்வி கேட்டு துளைத்துள்ளனர். பெண்ணின் அண்ணன் மற்றும் நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய உள்ளிட்ட விவகாரத்தை விஷ்ணு ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்களை தாக்கிய அண்ணன்களே சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ, தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து காவல்துறையில் விஷ்ணு மற்றும் அந்தப் பெண்ணின் தரப்பிலும் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் சுதந்திரத்திற்காகவும், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்க்காகவும், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை மிரட்டும் வகையிலும் உரத்த குரலில் வீடியோக்களை வெளியிட்டு வந்த இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்சர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சம்பந்தப்பட்ட பெண்ணின் அண்ணன்மார்களிடம் அடிவாங்கிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு உரிய தண்டனை விரைவில் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.