உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்களின் மீது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்த காலத்திற்குள் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தமிழக அரசு குற்றம்சாட்டி இருந்தது. மசோதாக்கள் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 2வது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ரவி அனுப்பியது சட்டத்திற்கு எதிரானது என்றும், அந்த 10 மசோதாக்களும் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநருக்கு அனுப்ப வைத்த நாளில் இருந்தே ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதப்படும் என அறிவித்தது.
2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
இந்த 10 மசோதாக்களில் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதாவும் அடங்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 10 மசோதாக்களும் ஆளுநரின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு, மசோதாக்கள் சட்டமானதாக அரசிதழில் தமிழக அரசு அறிவித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்திருந்தார். தமிழக முழுவதும் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்த நிலையில், 8 தனியார் பல்கலைக்கழங்கள் தொடர்பாக தனியார் பல்கலைக்கழங்கள் திருத்த சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டிட உரிமை திருத்த சட்ட மசோதா ஆகிய 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(ஏப்.22) ஒப்புதல் அளித்துள்ளார்.