தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கோட்டையை நோக்கி, மெரினா காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது!
தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது!
உதவித் தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உழைப்பாளர் சிலை அருகே முற்றுகை பேரணியில் ஈடுபட முயன்றவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 6000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கோட்டை தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் முன்வைத்த கோரிக்கைகள்

100 நாள் வேலை திட்டத்தில் விண்ணப்பிக்கின்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தனியான வேலை அட்டை வழங்குவதுடன், தொடர்ந்து 100 நாட்கள் வேலை முழுமையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவிகிதம் பணி மற்றும் 4 மணி நேரம் வேலை என ஏற்கனவே இருந்து வந்த நடைமுறையை மாற்றி, 8 மணி நேரம் வேலை, நாள் முழுவதும் பணித் தளத்தில் இருக்க வேண்டும் என்ற 2024 ஆம் ஆண்டின் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை உத்தரவை ரத்து செய்து மீண்டும் 4 மணி நேர வேலையை மட்டுமே உத்தரவாதப்படுத்த வேண்டும்.

மீண்டும் 4 மணி நேர வேலையை மட்டுமே உத்தரவாதப்படுத்த வேண்டும். 2 கி.மீ. தூரத்திற்கு மேல் செல்ல வேண்டிய பணித்தளத்திற்கு வாகன ஏற்பாடு, பணித்தளத்தில் கழிப்பறை உள்ளிட்ட சட்டப்படியான, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகள் செய்துதர வேண்டும்.

சமூகப்பாதுகாப்பு திட்ட ஒதுக்கீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 25 விழுக்காடு கூடுதலாக வழங்க வேண்டும் என்ற ஊனமுற்றோர் உரிமைகள் சட்ட விதியின்படி இத்திட்டத்தில் அவர்களுக்கான வேலை நாட்களை 125 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும். 2024-25 ஆம் ஆண்டில் வேலை செய்த நாட்களுக்கான ஊதிய பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், ஊதிய தாமதத்திற்கான சட்டப்படியான தாமதக் கட்டணமும் வழங்க வேண்டும்.

இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.