காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார்
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமார்.இந்த நிலையில் புறம்போக்கு நிலத்தை மீட்க வந்த அதிகாரிகளை தாக்கியதாக அம்மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2014ம் ஆண்டு மிடாலம் பகுதியில் புறம்போக்கு நிலத்தை மீட்பதற்காக அரசு அதிகாரிகள் வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ராஜேஷ்குமார் உள்ளிட்ட 3 பேர் அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
3 மாதம் சிறை தண்டனை
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் உட்பட 3 பேருக்கு தலா 3 மாதம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.100 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.