கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம்!
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பூட்டானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது காரைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததற்கு எதிராக, நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வீரா ராஜா வீரா பாடல் பதிப்புரிமை வழக்கில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாக்குதல் வழக்கில் அக்டோபர் 27-ம் தேதி நடிகர் உன்னி முகுந்தன் ஆஜராக சம்மன்
அடுத்த மாதம் 13ஆம் தேதி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்புள்ளது என பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் பேட்டி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாய் செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை பாதுகாக்கிற பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த உதகை மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி (பொறுப்பு) செந்தில்குமார் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.
கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்குத் தடை கேட்டுச் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தெருநாய்களை பிடித்துக் காப்பகத்தில் அடைக்க வேண்டும் எனப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறுத்தி வைப்பு
இபிஎஸ்க்கு எதிராக வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற்றுள்ளது
பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு எதிரான அவசர வழக்கை உயர்நீதிமன்றத்தில் நாளைச் சட்டப்படி எதிர்கொள்வோம் எனப் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
சுங்கச்சாவடிகளில் நான்கு வாரங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்க தடை விதித்த கேரள உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
யார் உண்மையான இந்தியர் என்பதை முடிவு செய்வது நீதிமன்றத்தின் பணி அல்ல எனக் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, சாடியுள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு தனது வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இன்று ஆயுள் தண்டனை வழங்கிச் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா தனது வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசு புதிதாகத் தொடங்க உள்ள மற்றும் அமலில் உள்ள திட்டங்கள்குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதலமைச்சரின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் நிலத்திற்காக்நிலம் வாங்குவதற்காக ரூ. 35 லட்சத்தை வாங்கி விட்டு இடத்தை தரவில்லை இடத்தின் உரிமையாளரிடம் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் உள்ளிட்டோர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்திற்கு வந்து விளக்கம் அளித்த நிலையில், நீதிமன்றம் மூலம் தீர்த்து கொள்ளும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஏழு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுத்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023ல் மரத்தை வெட்டிய கிரகாம், காருதெர்ஸ் இருவரும் அதனை வீடியோ ஆகவும் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் முழுமையாக அகற்றும்படி தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
POCSO வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து திருவில்லிபுத்தூர் குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.