ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு ஊராட்சியில் தூய்மை மிஷின் கழிவுகள் சேகரிப்பு இயக்கத்தின் தூய்மை பணி தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்துக்கொண்டு தூய்மை பணிகளை தொடங்கி வைத்தனர்.
TET தகுதி தேர்வு குறித்த உத்தரவு
அதனைத்தொடர்ந்து பூட்டுதாக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் மூலம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதி மொழியை ஏற்றுக்கொள்ளப்பட்டது.தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து, பள்ளி வகுப்பறையில் நடைபெற்று வந்த தேர்வினை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், TET தகுதி தேர்வு குறித்த உத்தரவு தொடர்பாக பள்ளி கல்வி துறையின் நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு, ஏற்கனவே மறு சீராய்வு மனு தமிழக அரசு சார்பில் செல்ல போகிறோம் அதற்கான மனு வழக்கறிஞர் எம்.பி.வில்சனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் யாருக்கும் பயம் தேவையில்லை
அது தொடர்பான பதிவு பட்டியல் நாளை வெளியாகிறது. இதுசார்ந்த வழிமுறை தெளிவுபடுத்துவது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு கேட்டுள்ளது. அதன்படி தமிழக அரசும் சட்டரீதியாக போராடுதுகிறது என்றாலும், இன்னொரு பக்கம் ஆசிரியர்கள் யாருக்கும் பயம் தேவையில்லை. ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை பாதுகாக்கிற பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என தெரிவித்தார்.