அரசியல்

திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கும்- பா.ம.க வழக்கறிஞர் பாலு பேட்டி

அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு எதிரான அவசர வழக்கை உயர்நீதிமன்றத்தில் நாளைச் சட்டப்படி எதிர்கொள்வோம் எனப் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கும்- பா.ம.க வழக்கறிஞர் பாலு பேட்டி
பாமக வழக்கறிஞர் பாலு
சென்னை ரிப்பன் மாளிகை முற்றுகை விட்டு 7வது நாளாகப் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களைப் பாமக சார்பாக வழக்கறிஞர் பாலு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தூய்மை பணியாளர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 7 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்திற்கு ஆதரவு

ராயபுரம், திருவிக உள்ளிட்ட பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களைத் தனியாரிடம் சென்று வேலை செய்யுமாறு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், அதைக் கண்டித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதிமுக 11 மண்டல தூய்மை பணியாளர்களைத் தனியார் மையம் ஒப்படைத்தபோது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தூய்மை பணியாளர்களைச் சந்தித்து தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தார். அதன் பின்னர் ஆட்சிக்கு வந்து தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யாததால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தச் சாலை முழுவதும் உயர் அதிகாரிகள் ஐபிஎஸ், ஐபிஎஸ் என உயர் அதிகாரிகள் அனைவரும் செல்கின்றனர். தற்போது அரசு சார்ந்த, உயர் அதிகாரி யாரும் தூய்மை பணியாளர்கள் இருக்கக்கூடிய நிர்வாகியிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்தார்.

வழக்கைச் சட்டப்படி சந்திப்போம்

தூய்மை பணியாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனக் கடிதம்மூலம் எழுதி அவர்களிடம் கொடுக்க வேண்டும் என அறிவித்தல்பேரில் கொடுத்து ஆதரவை தெரிவித்தோம் எனவும் தெரிவித்தார். மேலும், பாமக பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என ராமதாஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் நாளை வழக்காக விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதுகுறித்த கேள்விக்கு, ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெற உள்ள பாமக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடக்கும். அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொதுக்குழு ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பு தொடர்பாக, தானும் கேள்விப்பட்டதாகவும் பொதுக்குழு தொடர்பான வழக்கைச் சட்டப்படியாக நாளை நாங்கள் சந்திப்போம் எனவும் தெரிவித்தார். எங்களை எல்லாம் உருவாக்கியவர் மருத்துவர் ஐயா. அவர் புகழுக்கு நற்பெயருக்கு எந்த விதத்திலும் கலங்கம் ஏற்படாத வகையில் இருப்போம் எனச் சுட்டிக்காட்டினார்.

ராமதாஸ் குற்றச்சாட்டு பதில்

பொதுவெளியில் கண்ணியத்துடன் மரியாதையுடன் பேசக் கற்றுக்கொடுத்தவர் மருத்துவர் ஐயா எனத் தெரிவித்தார். மருத்துவர் ஐயா என்று கூறியவர்கள் இப்போது என்னை ராமதாஸ் என்று அழைக்கிறார்கள். அதற்குக் காரணம் அன்புமணி தான் என்ற மருத்துவர் ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு, யாருமே அவரைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை மருத்துவர் அய்யா என்றுதான் அழைக்கிறார்கள், யாராவது மருத்துவர் அய்யாவை பெயர் சொல்லி அழைத்து இருந்தால் அது தவறு எனச் சுட்டிக்காட்டினார்.