கோவில் நிலம் ஆக்கிரமிப்பு குறித்த விசாரணைக்குச் சென்ற டி.எஸ்.பி. ராஜூ, தன்னைக் கன்னத்தில் அறைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றதாக தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் குமரவேல் என்பவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்தது என்ன?
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தில் கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான விசாரணைக்கு டி.எஸ்.பி. ராஜூ சென்றிருந்தார். அப்போது பேச்சுவார்த்தையை வீடியோ பதிவு செய்த தி.மு.க. நிர்வாகியான குமரவேலை அவர் கன்னத்தில் அறைந்து, செல்போனைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான குமரவேல், விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வைரலாகும் வீடியோ
தான் விஷம் குடிப்பதற்கு முன், குமரவேல் ஒரு வீடியோவைப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், “டி.எஸ்.பி. தாக்கியதில் என்னுடைய இரண்டு காதுகளும் கேட்கவில்லை. இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு விஷம் குடித்துவிட்டேன். தி.மு.க. நிர்வாகியாக இருக்கும் எனக்கே இந்த நிலைமை என்றால், இது தளபதி (முதலமைச்சர் ஸ்டாலின்) கவனத்திற்குச் செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
காவல்துறையின் விளக்கம்
இதுகுறித்து நாச்சியார்கோவில் காவல் நிலைய போலீசாரிடம் விசாரித்தபோது, “டி.எஸ்.பி. அடித்தது உண்மைதான். விசாரணை நடக்கும்போது, குமரவேல் தொடர்ந்து வீடியோ பதிவு செய்ததால், அவரை கன்னத்தில் அறைந்து செல்போனைப் பறித்து ஜீப்பில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்றனர். பின்னர் இரவு அவரை விடுவித்து விட்டோம்” என்று தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து டி.எஸ்.பி. ராஜூ எந்த விளக்கமும் அளிக்கவில்லை.