K U M U D A M   N E W S

நீதிமன்றம்

மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.. அரசின் சரியான நடவடிக்கைக்கு சான்று!

மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை உறுதிபடுத்துவதற்கான சான்று என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் விவகாரம்: எனக்கு காது கேட்க மாட்டேங்குது - நாகலாந்து ஆளுநர் பதில்

தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் எனக்கு இந்தக் காது வேலை செய்ய மாட்டேங்குது மிஷின் வைக்க வேண்டும் என்று கூறினார்.

வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. மீண்டும் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அதிரடி!

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது, அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெரியார் பல்கலை., துணைவேந்தர் ஜாமின்... காவல்துறை மனுவிற்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, சேலம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி, காவல் துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, துணைவேந்தர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் விடுவிக்கக்கூடாது - தமிழக அரசு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என தமிழக அரசு போக்சோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அன்னை இல்லம் தொடர்பான வழக்கு.. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு...9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்

வனப்பகுதியில் அன்னிய மரங்களை அகற்ற நவீன இயந்திரங்கள் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

தமிழக வனப்பகுதிகளில் அன்னிய மரங்களை அகற்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ரம்மியால், ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனி நபர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு.. நேரில் ஆஜராக குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், பிரபல சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.

விசாரசணை நடத்த காலக்கெடு வேண்டும்.. இபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு

அதிமுக சின்னம், மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தி முடிப்பதற்கு உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

கைதிகள் குறித்த வழக்கு: அதுவும் மனித உரிமை மீறல் தான்...அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்

ஜாமின் கிடைத்த பின்னர் எந்த கைதியும் சிறையில் இருப்பதை தவிர்க்கும் வகையில் நடைமுறையை பின்பற்றுமாறு சிறை அதிகாரிகளுக்கும், சட்டப் பணிகள் ஆணையத்திற்கும் நீதிபதிகள் உத்தரவு

பாம் சரவணனின் மருத்துவ சிகிச்சை மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்

போலீசால் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Money in Delhi Judge House டெல்லி நீதிபதி மீது பாய்ந்த நடவடிக்கை | Judge Yashwant Varma News Tamil

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரம்

பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாக பதிவு- தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன்  மோசடியாக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழக அரசுக்கு அட்வைஸ் செய்த உயர்நீதிமன்றம்

அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம்

அனுமதியின்றி போராட்டம் செய்தால் அபராதம் - அரசுக்கு நீதிமன்றம் யோசனை..!

அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்துவதை விடுத்து உடனடி அபராதம் விதிக்கலாமே என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு யோசனை தெரிவித்துள்ளது.

பாம்பன் மீனவர்களுக்கு ரூ.56 லட்சம் அபராதம்

ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர்களுக்கு ரூ.56 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!

முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீதான  வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமான் வழக்கு தள்ளுபடி.. ஆவணங்களை சமர்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி சீமான் மீதான வழக்கை  எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு | Kumudam News

அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத்தாக்கல்

சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டத்தை இனி ஆண்டுதோறும் நடத்த வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு | Kumudam News

தேரோட்டத்தை அமைதியான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு

ரவுடி ஜான் கொ** வழக்கு.. நீதிமன்றம் போட்ட உத்தரவு | Salem Rowdy John Murder in Erode | Kumudam News

ஜீவகன், சலீம் ஆகியோருக்கு ஏப்.3ம் தேதி வரை காவல் விதித்து மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவு