இந்திய ராணுவம் குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உண்மையான இந்தியர் இப்படியெல்லாம் பேசமாட்டார் என்று ராகுல் காந்தி மீது அதிருப்தி தெரிவித்து இருந்தது.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின்போது, ராகுல் காந்தி இந்திய ராணுவம் குறித்து தெரிவித்த கருத்துகளைக் குற்றம்சாட்டி, "உண்மையான இந்தியர் இப்படியெல்லாம் பேசமாட்டார்" என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தது.
இந்திய அரசியலில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு விவகாரத்தில், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூர்மையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் இதுகுறித்து பேசியுள்ள பிரியங்கா காந்தி, யார் உண்மையான இந்தியர் என்பதை தீர்மானிப்பது நீதிபதிகளின் வேலை கிடையாது என்று கூறியிருக்கிறார்.
“ராகுல் காந்தி எப்போதும் இந்திய ராணுவ வீரர்களைப் பெருமைப்படுத்தும் மனிதர். நாடு மற்றும் அதன் பாதுகாப்பை நேர்மையாக மதிக்கும் ஒரு மக்களின் பிரதிநிதியாகவே அவர் செயல்படுகிறார். ஒரு எதிர்க்கட்சித் தலைவராக அவர் தனது கடமையைச் செய்ய முயற்சிக்கிறார். ஆனால் அவரது கேள்விகளுக்குப் பதிலளிக்க மத்திய பாஜக அரசு விருப்பப்படவில்லை. மாறாக நாடாளுமன்ற கூட்டத்தொடர்களையே முறையாக நடத்த மறுக்கிறது,” எனக் குற்றம்சாட்டினார்.
இந்தச் சூழ்நிலையில், ராகுல் காந்தி மீது வழக்குகள் தொடரப்படும் விதம், கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்கமாகவே பார்க்கப்பட வேண்டும் எனக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.