K U M U D A M   N E W S

தமிழ்நாடு

Find my device ஆப் மூலம் காணாமல் போன செல்ஃபோனை கண்டுபிடித்த பெண்!

நெற்றியில் தாக்கிவிட்டு, வைத்து தாக்கி செல்போனை பறித்து சென்ற கும்பலை, find my device ஆப் மூலம் சில நிமிடங்களில் செல்போன் பறித்துசென்ற திருடர்களை துரத்தி பிடித்த செல்போன் பறிகொடுத்தவரின் மனைவி மீட்டுள்ளார்

நெல்லையப்பர் கோயிலில் ரீல்ஸ் செய்த இளைஞர்கள்.. காவல் நிலையத்திற்கு பறந்த புகார்

வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க வழக்கு.. ஜூன் மாதம் தள்ளிவைத்த நீதிமன்றம்!

தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு!

மதுரையில் மழலையர் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து, நான்கு வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, தாளாளர், ஆசிரியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள்.. நடவடிக்கை எடுக்காத அரசு.. சிஏஜி அறிக்கை

தமிழக அரசு உத்தரவை மீறி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள் மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசும், மாநில ஆளுநரும் பாம்பு, நரியும் போல் செயல்படுகின்றனர் - முதலமைச்சர் உவமை

மத்திய அரசும், மாநில ஆளுநரும் பாம்பு, நரியும் போல் செயல்படுவதாகவும், அவர்களின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழக அரசு சாதனை படைத்து வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பொள்ளாச்சி வழக்கு.. நீதிபதி மாற்றம்.. தீர்ப்பு வழங்குவதில் சிக்கலா?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டப்படி மே 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் ரம்மி: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை ஒழுங்குப்படுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

அமைதி பூங்காவாக தமிழகம்...காவல்துறைக்கு முதல்வர் புகழாரம்

சாதி, மதக்கலவரம் இல்லாத அமைதியான சூழல் தமிழ்நாட்டில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை நீதிமன்றத்தில் பரபரப்பு.. குற்றவாளி தீர்ப்பிற்கு முன் தப்பியோட்டம்!

கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி, நீதிமன்ற தீர்ப்புக்கு பயந்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் தாக்குதல்: "பிரார்த்தனை செய்கிறேன்"...நடிகர் அஜித்

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்வதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

களமிறங்கும் "ரோபோட்டிக் காப்" –சென்னை போலீஸ் அறிவிப்பு

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதி அறிமுக செய்ய உள்ளதாக சென்னை போலீஸ் அறிவித்துள்ளது.

வேலூரில் உடலை எரிக்க வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...விசாரணை நடத்தப்படும் என மாநகராட்சி விளக்கம்

வேலூரில் உடலை எரிக்காமலேயே அஸ்தி வழங்குவதாகவும், உடலை வைத்து ஏதோ தவறு நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

வாழப்பாடியில் இரு குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்...உறவினர்கள் புகாரால் சிக்கிய தாய்

வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில் இரண்டு சிறுவர்கள் உடல் மீட்கப்பட்ட நிலையில், பெற்ற தாயே கொலை செய்ததாக உறவினர்கள் புகார்

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்...பூந்தமல்லி – போரூர் இடையே சோதனை ஓட்டம் வெற்றி

பூந்தமல்லி - போரூர் இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

Padma Awards: பத்ம விருதுகள் பெற்ற தமிழக பிரபலங்கள்.. குவியும் வாழ்த்து!

நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமையல் கலை நிபுணர் தாமு, சிற்பி ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், குடியரத்தலைவரிடம் இருந்து பத்ம விருதுகளைப் பெற்றனர்.

சாதி மறுப்பு திருமணத்தால் ஆணவக்கொலை.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்!

சாதி மறுப்பு திருமணத்தால் ஆணவக்கொலை.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்!

போக்குவரத்து துறையில் இளநிலை பொறியாளர்கள் நியமனத்திற்கு எதிரான மனு தள்ளிவைப்பு!

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நியமிக்கப்பட்ட இளநிலை பொறியாளர்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வீணாகிறது - நீதிபதி வேதனை

பொதுமக்களின் வழக்குகளுக்காக 7 சதவீத நேரத்தை மட்டுமே நீதிமன்றங்கள் செலவிடுவதாகக் குறிப்பிட்ட சென்னை நீதிமன்றம், நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு பொன்னான வாய்ப்பளித்த கோல்டன் ஸ்பேரோ கார்னிவல்!

ரோட்டரி மாவட்டம் 3233 சார்பில் நடைப்பெற்ற கோல்டன் ஸ்பேரோ கார்னிவல் நிகழ்வில் திரளான பெண்கள் பங்கேற்று தங்களது திறமையினை வெளிப்படுத்தினர்.

முருகேசன் - கண்ணகி ஆணவக் கொலை வழக்கு.. குற்றவாளிக்கு தண்டனை உறுதி!

கடலூரில் 22 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய 13 பேரின் ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தண்டனை பெற்றவர்களில் கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது.

வாழை இலை சோறு.. பீர் பாட்டில்.. விமர்சனத்திற்கு உள்ளான திமுக ஆய்வுக் கூட்டம்!

திமுக ஆய்வுக் கூட்டத்திற்கு பின் இளைஞர்களுக்கு மதுவுடன் கூடிய அசைவ விருந்து வைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

செந்தில் பாலாஜி வழக்கு.. முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை வழக்கு.. ஜெயலலிதாவின் தனி உதவியாளருக்கு சம்மன்

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது.