தமிழ்நாடு

மூழ்கிய தரைப்பாலம்: தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள்…ஆட்சியருக்கு கோரிக்கை

தண்ணீர் அதிகமாக வருவதால் தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூழ்கிய தரைப்பாலம்: தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள்…ஆட்சியருக்கு கோரிக்கை
திருப்பத்தூர் அருகே தரைப்பாலம் மூழ்கியால் தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு பகுதியை அடுத்த தலுக்கன்வட்டம் பகுதிக்கு செல்லும் வழியில் தரைப்பாலம் அமைந்துள்ளது.

மூழ்கும் தரைப்பாலம்

மேலும் தொடர் மழையின் காரணமாக ஆண்டியப்பனூர் அணை நிரம்பி வழிவதால் உபரிநீர் குரிசிலாப்பட்டு அடுத்த தலுக்கன்வட்டம் பகுதியில் உள்ள தாரை பாலத்தின் வழியாக உபரிநீர் பாம்பாற்றுக்கு செல்வதால் தற்போது பெய்த தொடர் கனமழை காரணமாக தரைப்பாலம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சென்றுக்கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக அப்பகுதியில் பள்ளிக்குச் செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் என அனைவரும் இவ்வழியை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மாணவர்கள் கோரிக்கை

மேலும் தரைப்பாலத்தின் மீது மழை வெள்ளம் செல்வதால் பொதுமக்கள் கயிறுகட்டி அதனைப் பிடித்துக்கொண்டே தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர். மேலும் தற்போது காலாண்டுத்தேர்வு நடைபெற்று வருவதால் தரைப்பாலத்தின் மீது தண்ணீர் செல்லும் காரணத்தால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், தேர்வு எழுத முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் மழைக்காலங்களில் இந்த தரைப்பாலத்தின் மீது உபரிநீர் செல்வதும் அப்பகுதி மக்கள் அவதிப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.எனவே உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டிக்கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.