சிங்கப்பூரில் இளம்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியர் ஒருவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அந்நாட்டு சட்டப்படி 6 சாட்டையடிகளும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ள இந்தியரான அங்கித் சர்மா (46) என்பவர், கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி, சாங்கி சிட்டி பாயிண்ட் வணிக வளாகத்தில் 31 வயது பெண் ஒருவரைப் பணி நிமித்தமாகச் சந்தித்துள்ளார். முதலில் வேலை தொடர்பான உரையாடல்கள் நடந்த நிலையில், சிறிது நேரத்தில் அங்கித் சர்மா அந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியாகப் பேசி அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
தாய்மார்கள் அறையில் அத்துமீறல்
இதனால் சங்கடத்துக்கு உள்ளான அந்தப் பெண், அங்கிருந்து கழிவறைக்குச் செல்வதாகக் கூறி எழுந்துள்ளார். ஆனால், அவரைப் பின்தொடர்ந்து சென்ற அங்கித் சர்மா, அருகில் இருந்த தாய்மார்கள் பாலூட்டும் அறைக்கு அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளியின் வாதம் நிராகரிப்பு
இதையடுத்து அங்கித் சர்மா பிடியில் இருந்து தப்பிச் சென்ற அந்தப் பெண், இது குறித்துப் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில், அங்கித் சர்மா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அந்தப் பெண்ணின் சம்மதத்துடன்தான் அவர் அருகில் சென்றதாகவும், தாய்மார்கள் அறைக்குச் செல்ல அந்தப் பெண்தான் ஆலோசனை கூறியதாகவும் அங்கித் சர்மா வாதிட்டார். இருப்பினும், அவரது வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது.
அரசுத் தரப்பு அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க கோரிய நிலையில், அங்கித் சர்மா தரப்பு 3 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அங்கித் சர்மாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6 சாட்டையடிகளும் வழங்கித் தீர்ப்பளித்தது.