நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள க.வெள்ளாளப்பட்டியில், 7 மாத ஆண் சிசு ஒன்று தொப்புள் கொடியுடன் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மகாலய அமாவாசை தினத்தன்று இந்தச் சம்பவம் நடந்திருப்பது, அப்பகுதி மக்களிடையே நரபலி குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.
க.வெள்ளாளப்பட்டியில் வீடு கட்டும் பணிக்காக மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில், காலை நேரத்தில் பணியாளர்கள் மணல் அள்ளும்போது இந்தக் கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாகப் பேளுகுறிச்சி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் மத்தியில், இது கருகலைப்பு செய்யப்பட்டு புதைக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்ற குழப்பம் நிலவுகிறது.
குறிப்பாக, அருகில் உள்ள மாரியம்மன் கோயிலின் சிசிடிவி பதிவில், நள்ளிரவு 2 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் அப்பகுதிக்குள் நுழைந்து சென்ற காட்சிகள் பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தச் செய்தி வெளியான பிறகும், இதுவரை எந்த ஒரு காவல்துறையும், அரசு மருத்துவமனை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், இறந்து கிடந்த சிசுவின் உடலை அப்பகுதி மக்கள் அப்புறப்படுத்திய நிலையில், காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.