தமிழ்நாடு

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்: விஏஓ அதிரடி கைது

திருவண்ணாமலை அருகே வாரிசு சான்றிதழ் வழங்க 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்: விஏஓ அதிரடி கைது
செங்கம் அருகே லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்முடியனுர் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் கிராம நிர்வாக அலுவலராக அலுவலர் குணாநிதி கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வருகிறார்.

வாரிசு சான்றிதழ்க்கு லஞ்சம்

இந்நிலையில் அம்மாபாளையம் பகுதியில் வெல்டிங் வேலை செய்து வரும் பிரவீன் தனது தாயார் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிய நிலையில் வாரிசு சான்றுக்காக இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளார்.

பின்னர் குணாநிதி தொலைபேசியில் பிரவீனிடம் வாரிசு சான்றில் கையொப்பமிட வேண்டும் என்றால் 2000 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

விஏஓ கைது

இதனை தொடர்ந்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் பிரவீன் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரை அடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பிரவீனிடம் கொடுத்து அனுப்பி அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் குணாநிதியை லஞ்சம் வாங்கும்போது கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.