கரூரில் கள்ள நோட்டுகளைத் தயாரித்து புழக்கத்தில் விட்டு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை, தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளும், அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேகத்தில் சிக்கிய முதல் நபர்
இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தாந்தோணிமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் தொடங்கியது. அப்போது, தாந்தோணிமலையைச் சேர்ந்த காண்டீபன் (52) என்பவர் ரூ.500 கள்ள நோட்டு கொடுத்து மதுபானம் வாங்கியபோது, கடையின் மேற்பார்வையாளர் வேணுவிஜய் சந்தேகமடைந்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், தாந்தோணிமலை போலீசார் காண்டீபனைக் கைது செய்து, அவரிடமிருந்து 21 கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
போலீசார் விசாரணையில் அம்பலம்
இந்த வழக்கு குறித்து, திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில், கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், காண்டீபன் கொடுத்த தகவலின் பேரில், திருச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் (44) கடந்த 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து, சென்னையில் வசித்து வந்த சேலத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (48) கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து கள்ள நோட்டு தயாரிக்கத் தேவையான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கேரளா மற்றும் ஆந்திராவுக்கு விரைந்த தனிப்படை
இந்த மோசடி கும்பல் ஆந்திரா மற்றும் கேரளாவிலும் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தனிப்படையினர் கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்குச் சென்று, கேரளாவைச் சேர்ந்த சானு (44) மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த அர்ஜுன் என்கிற விஜயகுமார் ஆகியோரையும் நேற்று (செப்.20) கைது செய்தனர்.
இந்த ஐந்து பேரிடம் இருந்து, மொத்தமாக ரூ.6 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளும், கள்ள நோட்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், இந்த கும்பலுக்குப் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.