தமிழ்நாடு

மாபெரும் திட்டங்களுக்கு மோடி அடிக்கல்! - அருணாச்சலப் பிரதேசம், திரிபுராவுக்குப் பிரதமர் பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் ₹5,100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நீர்மின் திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் ஆலய மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மாபெரும் திட்டங்களுக்கு மோடி அடிக்கல்! - அருணாச்சலப் பிரதேசம், திரிபுராவுக்குப் பிரதமர் பயணம்!
மாபெரும் திட்டங்களுக்கு மோடி அடிக்கல்! - அருணாச்சலப் பிரதேசம், திரிபுராவுக்குப் பிரதமர் பயணம்!
பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 22, 2025) அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுராவுக்குச் சென்று ரூபாய் 5,100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அருணாச்சலப் பிரதேசத்தின் பரந்த நீர்மின் திறனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இட்டாநகரில் மட்டும் ரூபாய் 3,700 கோடிக்கு மேல் மதிப்புள்ள இரண்டு பெரிய நீர்மின் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஹியோ நீர் மின் திட்டம் (240 மெகாவாட்) மற்றும் டாடோ-ஐ நீர் மின் திட்டம் (186 மெகாவாட்) ஆகிய இந்த இரண்டு திட்டங்களும் அருணாச்சலப் பிரதேசத்தின் சியோம் துணைப் படுகைப் பகுதியில் உருவாக்கப்படும். இந்தத் திட்டங்கள் இப்பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மற்றும் பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பிரதமர் மோடி ரூ. 1,290 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களையும் தொடங்கி வைப்பார். இதில் சுகாதாரம், தீ பாதுகாப்பு மற்றும் பணிபுரியும் பெண்கள் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் அடங்கும். அதேபோல், தவாங்கில் 9,820 அடிக்கு மேல் உயரத்தில் ஒரு அதிநவீன மாநாட்டு மையத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளை நடத்தும் முக்கிய மையமாக இது செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிறகு, பிரதமர் மோடி திரிபுராவுக்குச் சென்று பூஜை மற்றும் தரிசனம் செய்து, மாதாபாரியில் உள்ள மாதா திரிபுர சுந்தரி கோயில் வளாகத்தின் மேம்பாட்டுப் பணிகளையும் தொடங்கி வைப்பாரென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.