தமிழ்நாடு

இரிடியம் மோசடி வழக்கு: மூளையாகச் செயல்பட்ட சாமிநாதன் மேலும் ஒரு வழக்கில் கைது!

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரிடியம் மோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட சாமிநாதனை, மதுரை சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரிடியம் மோசடி வழக்கு: மூளையாகச் செயல்பட்ட சாமிநாதன் மேலும் ஒரு வழக்கில் கைது!
இரிடியம் மோசடி வழக்கு: மூளையாகச் செயல்பட்ட சாமிநாதன் மேலும் ஒரு வழக்கில் கைது!
இந்த வழக்கில் இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்களிடமிருந்துது லட்சக்கணக்கான ரூபாய், தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியான சாமிநாதனை, சென்னை சிபிசிஐடி போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்:

விசாரணையில், மோசடி செய்த பணத்தில் சாமிநாதன் மதுரையில் மூன்று வீடுகளையும், சென்னையில் ஒரு வீட்டையும், பல நிலங்களையும் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து, சில துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மோசடி செய்யப்பட்ட பணம் உள்ள 10-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கவும், நிலப் பத்திரங்களைப் பறிமுதல் செய்யவும் சிபிசிஐடி போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

தற்போது, மதுரை இரிடியம் மோசடி வழக்கிலும் சாமிநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று மதுரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். இதற்கிடையில், சாமிநாதனின் மனைவி ராதா உட்பட பேரைச் சென்னைனை சிபிசிஐடி போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.