"நடிகர் விஜய், பாஜக பின்புலத்தில் இருக்கும் தைரியத்தில் அகந்தையுடன் முதலமைச்சரை மிரட்டும் தோனியில் பேசுகிறார்" என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய் தமிழக அரசை விமர்சிப்பது குறித்த கேள்விக்குக் காட்டமாகப் பதிலளித்தார்.
'பாஜகதான் விஜய்யை இயக்குகிறது'
"நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். சினிமாவில் பேசுவது போல் பேசுகிறார். அவருக்குக் கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது. மத்திய அரசே சிலரைக் கட்சி தொடங்க வைத்து, ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. பிரதமருக்கு இருக்கும் புரோட்டோகால் வேறு, விஜய்க்கான புரோட்டோகால் வேறு. பிரதமர் மற்றும் முதல்வர் பற்றிப் பேசும்போது கண்ணியத்துடனும், வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது கவனத்துடனும் இருக்க வேண்டும்" என்று அப்பாவு தெரிவித்தார்.
"முதலமைச்சரை மிரட்டும் தோனியில் அவர் பேசும்போதே, விஜய்யை பாஜகதான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
'பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல'
"தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு ஆளுங்கட்சி பயப்படுகிறதா?" என்ற கேள்விக்கு, "பயப்படுபவர்களுக்குத்தான் பயம் வர வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை. இவரைப் போல 'தலைவா' படப் பிரச்சனைக்காக மூன்று நாட்கள் கொடநாட்டில் காத்திருந்து காலில் விழுந்தவர்கள் நாங்கள் அல்ல" என்று காட்டமாகப் பதிலளித்தார்.