K U M U D A M   N E W S

தமிழ்நாடு

சத்குரு வழங்கும் தியானங்களால் இளமையாகும் மூளை- ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு

“சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டு ஈஷா அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் தியான பயிற்சிகளினால் மூளையின் வயது 5.9 ஆண்டுகள் வரை இளமையாகிறது” என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஐ.பி.எல் சூதாட்டம்: ஒருவர் கைது - ரூ.96 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

கோவையில் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ரூ. 50 லட்சம் சொத்து, 46 லட்சம் வங்கி கணக்குகளை முடக்கி காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆகாஷ் பாஸ்கரனுக்கு ED சம்மன்... ‘பராசக்தி’ படத்திற்கு சிக்கலா?

இன்று ஆஜராகும்படி ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் ஆகாஷ் பாஸ்கர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

சர்வதேச தேநீர் தினம்.. வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சிக்கொடுத்த கடை உரிமையாளர்!

சர்வதேச தேநீர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் டீ மாஸ்டர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து கடைக்கு வந்த 50 நபர்களுக்கு இலவசமாக ஆவின் கடை உரிமையாளர் தேநீர் வழங்கியுள்ளார்.

மதுபோதையில் கார் ஓட்டிய தலைமைக்காவலர் தீக்குளித்து தற்கொலை!

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்தில் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் அருகே கார் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு...ஒருவர் படுகாயம்

கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Gold Rate Today: மீண்டும் ஏறிய தங்கம் விலை

ஒரு கிராம் தங்கம் (இன்று ) ரூ.220 உயர்ந்து ரூ.8,930க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் - காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் ஐந்து வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்குமாறு காவல் ஆணையர் அருண் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சேலம் அருகே மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து நகைகள் கொள்ளை...மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை

மூதாட்டியின் ஆடைகள் கலைந்த நிலையில் இருந்ததால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடைபெற்று கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

திமுக நிர்வாகி மீது கல்லூரி மீதான புகார்.. ராணிப்பேட்டை எஸ்.பி. அலுவலகம் விளக்கம்!

திமுக நிர்வாகி தெய்வசெயல் ஏமாற்றி திருமணம் செய்ததாக கல்லூரி மாணவி புகார் அளித்த வழக்கில், புகார் மீது காவல்துறை அலட்சியம் காட்டுவதாக கல்லூரி மாணவி குற்றச்சாட்டிய வழக்கில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இந்த வழக்கு தொடர்பாக விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆபீஸ் வரவங்க இதை கட்டாயம் செய்யணும்...தென்காசி கலெக்டர் அறிவிப்பு

மோட்டார் சைக்கிளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என ஆட்சியர் அறிவிப்பு

பழைய குற்றால அருவி போறீங்களா? ஒரு நிமிஷம்.. வனத்துறையின் முக்கிய அறிவிப்பு

பிரபலமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றான பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க முடியாது என தென்காசி மாவட்ட வன அதிகாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கல்யாண ராணி விரித்த வலை.. மனைவி இல்லாத அரசு அதிகாரிகள் தான் டார்கெட்!

மடோனா என்கிற பெண்மணி, மனைவி இல்லாத ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை டார்கெட் செய்து அவர்களை திருமணம் செய்துக் கொண்டு சொத்துகளை அபகரிப்பதை தொடர் கதையாக மேற்கொண்டு வந்த நிலையில், போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் திருட்டு.. முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்குகள் மாயம்!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முக்கிய ஆவணங்கள் மற்றும் 4 ஹார்ட் டிஸ்குகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் கார் ஓட்டிய கானா பாடகி விமலா.. கார் விபத்தில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

சென்னையில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிய கானா பாடகி திருநங்கை விமலா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய மர்ம கும்பல்.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய சைபர் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒகேனக்கல் ஆற்றில் பெருக்கெடுத்த காவிரி – வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக நீர் அதிகரித்து காணப்படுகிறது.

முதலமைச்சருக்காக நாங்கள் காத்திருக்க வேண்டுமா? – பெண்கள் போலீசாருடன் வாக்குவாதம்!

முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்வதற்காக நீண்ட நேரம் பேருந்தில் காக்க வைத்ததால் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

7 மடங்கு அதிகரித்த முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள்.. லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

அதிமுகவைச் சேர்ந்த சேவூர் ராமச்சந்திரன், இந்து சமய அறநிலை துறை அமைச்சராக இருந்தபோது ஏழு மடங்கு சொத்து சம்பாதித்ததாகவும், 2016ஆம் ஆண்டு 2 கோடி சொத்து இருந்த நிலையில் 2021ஆம் ஆண்டு14 கோடி மதிப்பில் சொத்துக்கள் சேர்த்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொன்னதெல்லாம் பொய்.. வெள்ளை அறிக்கை கேட்கும் தமிழக விவசாயிகள்!

வேளாண்மையில் தமிழ்நாடு மிகப்பெரிய பின்னடைவில் உள்ள நிலையில், வேளாண் உற்பத்தி குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை தவறானது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அட்ராசிட்டி செய்யும் நடிகர் சூரியின் தம்பி.. ஆட்சியரிடம் புகாரளித்த நபரால் பரபரப்பு

மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்தை நடத்தி வரும் அவரது சகோதரர் லட்சுமணன் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் முத்துச்சாமி என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயல்பை விட 90% அதிகம்.. 2 தினங்கள் பலத்த காற்றுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வெப்பநிலை வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மற்றும் நாளை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்த வழக்கு.. 21 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய கொள்ளையன்!

நடிகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையனை, 21 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.