K U M U D A M   N E W S

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு.. காவல்துறை விசாரணை!

மதுரையில் மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியின்போது மின்சார வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர்களின் நாகரிகம் திருக்குறள் - கவிஞர் வைரமுத்து

தமிழர்களின் நாகரிகம் எது என்று கேட்டால் திருக்குறள் என கூறுங்கள் தந்தை திருவள்ளுவர் ஞான தந்தை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தென்காசி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

தென்காசி மாவட்டத்திற்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

2 ஏக்கரில் கடலை: 3 மாதத்தில் சுளையாக ரூ.80 ஆயிரம் வருமானம்!

கடலை விவசாயம் பண்ணினால் கவலை இல்லை என்று இரண்டு ஏக்கரில் கடலை விவசாயம் செய்து மூன்று மாதத்தில் 80 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கிறார் நீலவேணி.

என்னய்யா பேன்ட் தச்சு இருக்க? ஆத்திரத்தில் டெய்லரை கொன்ற நபர்

நாகர்கோவிலில் டெய்லர் தைத்து ஆல்டர் செய்து கொடுத்த பேன்ட் பிடிக்காததால்,டெய்லருடன் எழுந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, டெய்லரிங் கடை உரிமையாளரை கத்தரிக்கோலால் ஒருவர் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடை ரெடியா இருக்கா? இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ள நிலையில் தமிழகத்திலும் இதன் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தினம் கோவை,நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் துறை தலைவர் பணியிடமாற்றம் - மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு

சென்னை பல் மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் துறை தலைவர் இருளாண்டி பொன்னையா, புதுக்கோட்டை அரசு பல் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து, மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானலில் நாளை தொடங்குகிறது மலர்க்கண்காட்சி!

தமிழகம் முழுவதும் கோடை வெயிலியின் தாக்குதல் அதிகரிக்கும் நிலையில், சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கிறது.

இஸ்ரேலிய திரைப்பட விழா: தடை விதிக்காவிட்டால் முற்றுகை போராட்டம் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் அறிவிப்பு

இஸ்ரேலிய திரைப்பட விழா தடை விதிக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தங்கம் விலை வீழ்ச்சி: சவரனுக்கு ரூ.280 குறைவு!

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520க்கு விற்பனையாகிறது; ஒரு கிராம் தங்கம் ரூ.8940க்கு விற்பனையாகிறது.

ஏ.ஐ. மூலம் ஆபாச வீடியோ – மணிப்பூர் பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது!

தன் ஆசைக்கு இணங்காததால் மணிப்பூரை சேர்ந்த பெண்ணை ஏ.ஐ மூலமாக டெக்னிக்கலாக நாடகமாடி ஏமாற்றிய சென்னை நொளம்பூரை சேர்ந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.

அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் திருச்சி பேரணி அமைய வேண்டும் - திருமாவளவன்

திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: நேரடி கொள்முதல் நிலையங்களால் விவசாயிகள் வேதனை!

ஆற்காடு அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெற்பயிர்கள் முளைத்து காணப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. பயணிகள் அவதி!

அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் ரயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் சீர் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

4% வட்டியில் தங்க நகை கடன்.. தமிழக விவசாயிகள் எழுப்பும் கோரிக்கை

தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உடனடியாக திரும்பப் பெறவும் கோரிக்கை விடுத்துள்ளது.

தெய்வசெயல் மீதான புகார்.. ஆளுநரை காண ராஜ்பவன் வந்த இளம்பெண்ணால் பரபரப்பு

திமுக முன்னாள் நிர்வாகியான தெய்வசெயல் மீது அளித்த பாலியல் வன்கொடுமை புகாரை சிபிஐக்கு மாற்ற வேண்டி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முறையிடுவதற்காக உரிய அனுமதியின்றி ராஜ்பவன் சென்ற இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

நெருங்கியது தென்மேற்கு பருவமழை- வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

வங்கக் கடலில் வரும் 27 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்...3 பேரை பிடித்து விசாரணை

ரயிலில் கடத்தி வந்த ஹவாலா பணம் ரூ.32 லட்சம் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நடுக்கடலில் இலங்கை கடற்படை அத்துமீறல்...வலைகளை அறுத்தெரிந்ததால் மீனவர்கள் வேதனை

மீனவர்களின் வலைகள் மற்றும் எரிபொருளை இலங்கை கடற்படையினர் பறித்து சென்று அத்துமீறலில் ஈடுபட்டதாக கரைத்திரும்பிய நாகை மீனவர்கள் வேதனை

டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு...அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிப்பு

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் முறைகேடு நடந்துள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரிசர்வ் வங்கி சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி உள்ளது- அமைச்சர் தங்கம் தென்னரசு

தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது…வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என அறிவிப்பு

நிதி ஆயோக் கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.

கோவையில் பாஜக நடத்திய தேசியக்கொடி பேரணி- அதிமுகவினர் பங்கேற்பு

ஆப்ரேஷன் சிந்து வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையில் பா.ஜ.க வினர் நடத்திய மூவர்ண கொடி பேரணியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க ஜெயராமன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

15,000 ரூபாய் கடன்.. குழந்தையை அடகு வைத்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆந்திர மாநிலத்தை சார்ந்த தம்பதியினர் தாங்கள் வாங்கிய 15,000 ரூபாய் கடனுக்காக பெற்ற குழந்தையினை அடகு வைத்த நிலையில், காஞ்சிபுரம் பாலாற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.