தனியாக உடற்பயிற்சிக் கூடம் அமைத்துக் கொடுப்பதாகக் கூறி, ஒரு பெண்ணின் பெயரில் வங்கியில் ரூ. 1.75 கோடி கடன் வாங்கி மோசடி செய்த ஜிம் உரிமையாளரைச் சென்னை காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாகக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த உரிமையாளர் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் சென்று பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கு விவரப்படி, சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பவித்ரா என்பவர், திருமுல்லைவாயலைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது மனைவி அன்னபூரணி நடத்தி வந்த SKALE FITNESS என்ற தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். பவித்ராவுக்குத் தனியாக ஜிம் கிளை அமைத்துத் தருவதாக நம்ப வைத்த சீனிவாசன், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாரிமுனையில் உள்ள யூகோ வங்கிமூலம் பவித்ரா பெயரில் ரூ. 1.75 கோடி கடன் பெற்றுள்ளார். ஆனால், சீனிவாசன் மற்றும் அவரது மனைவி கிளை எதையும் தொடங்காமல், பணத்தை மோசடி செய்து ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் திடுக்கிட்ட பவித்ரா, வங்கியிலிருந்து வந்த கடனைத் திருப்பிச் செலுத்துமாறு வந்த நிர்பந்தம் காரணமாகக் கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்தச் சூழலில், கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி சீனிவாசன், அவரது மனைவி அன்னபூரணி உட்பட 4 பேர், திருவல்லிக்கேணியில் உள்ள பவித்ரா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆபாசமாகத் திட்டித் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவரது தாயாரை ஆபாசமாகத் திட்டிக் கொலை மிரட்டல் விடுத்ததுடன், பவித்ராவின் சகோதரி கண்மணியைத் தாக்கிக் காயம் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் பவித்ரா புகார் அளித்தார். ஆய்வுப் பிரிவினர் அத்துமீறி நுழைதல், ஆபாசமாகத் திட்டுதல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த சீனிவாசனை நேற்று (அக். 9) திருமுல்லைவாயல் பகுதியில் வைத்துப் போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது சீனிவாசனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சீனிவாசன் இதுபோலப் பலரை ஏமாற்றி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது மனைவி அன்னபூரணி உள்பட 3 பேரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.