சென்னை எழும்பூரில் அமைந்துள்ள பிரபல குழந்தைகள் நல மருத்துவமனையில், எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே முடிவுகள் எழுத்து வடிவிலும், அதுவும் தாமதமாகவும் வழங்கப்படுவதாகப் பெற்றோர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாள்தோறும் நூற்றுக்கணக்கான உள்நோயாளிகளும், ஆயிரக்கணக்கான புறநோயாளிகளும் சிகிச்சை பெற்றுச் செல்லும் இந்த முக்கிய மருத்துவமனையில், பல்வேறு உடல்நல பாதிப்புகளால் வரும் குழந்தைகளுக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுப்பதற்கான ஃபிலிம் இல்லாத காரணத்தால், முடிவுகள் வெறும் எழுத்து வடிவில் மருத்துவக் குறிப்புகளாக வழங்கப்படுகின்றன. இதனால் முடிவுகளைப் புரிந்துகொள்வதில் மருத்துவர்களுக்கும், பெற்றோருக்கும் குழப்பம் ஏற்படுவதோடு, முடிவுகள் கிடைப்பதிலும் அதிக காலதாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைக்காகக் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு வரும் பெற்றோர், எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் அங்கும் இங்கும் அலைந்து திரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதாக அரசு அறிவித்துவரும் நிலையில், சென்னையின் தலைசிறந்த மருத்துவமனையாகக் கருதப்படும் எழும்பூர் மருத்துவமனையிலேயே இத்தகைய குளறுபடிகள் நிலவுவது அதிர்ச்சி அளிப்பதாகக் குழந்தையின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், எக்ஸ்ரேவில் வரும் முடிவுகளை பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் கணினியும், கடந்த ஆறு மாதத்துக்கு மேலாகப் பழுதாகி இருப்பதாகவும் மருத்துவமனைப் பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பல மாதங்களாக இந்த முக்கியக் குளறுபடிகளை மருத்துவமனை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் செயல்பட்டு வருவதாகக் குழந்தைகளின் பெற்றோர் கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளனர்.