மதுரை அண்ணாநகர் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் தினேஷ் குமார் மரணம் தொடர்பான வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிச் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கின் பின்னணி மற்றும் குற்றச்சாட்டுகள்
மதுரை மானகிரி பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனது மகன் தினேஷ் குமாரை நேற்று (அக். 9) காலை அண்ணாநகர் காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா உள்ளிட்ட காவலர்கள் விசாரணைக்காக வீட்டிலிருந்து அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்டிருந்தார். விசாரணைக்குப் பிறகு, தினேஷ் குமார் அண்ணாநகர் பகுதியில் உள்ள கண்மாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலாதான் தனது மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்று அடித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டி, தினேஷ் குமாரின் உறவினர்கள் நேற்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
நீதிமன்றத்தில் நடந்த வாதமும் உத்தரவும்
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரெஷ் பாபு ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா மீது ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், இவர் பட்டியலினத்தவர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகவும் வாதிட்டனர். மேலும், இது போன்ற வழக்கை சம்பந்தப்பட்ட காவல் நிலையமே விசாரித்தால் நீதி கிடைக்காது என்றும் வலியுறுத்தினர்.
அரசு தரப்பு வழக்கறிஞர், இது காவல் நிலைய மரணம் கிடையாது என்றும், விசாரணைக்குப் பின்பே அசம்பாவிதம் நடந்துள்ளதால், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆய்வாளர் மீது ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் உள்ளதால், இந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளையும், அருகிலுள்ள சோதனைச் சாவடியின் சிசிடிவி காட்சிகளையும் உடனடியாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இறுதியாக, உயிரிழந்த தினேஷ் குமாரின் உடலை உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி உடனடியாகப் பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.