தமிழ்நாடு

10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - மகளிர் ஆணையத்தில் பரபரப்புப் புகார்!

பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - மகளிர் ஆணையத்தில் பரபரப்புப் புகார்!
10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - மகளிர் ஆணையத்தில் பரபரப்புப் புகார்!
qமாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, இன்று மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரிடம் புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லாததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களவை உறுப்பினரும் வழக்கறிஞருமான சுதாவுடன் இணைந்து ஜாய் கிரிசில்டா இந்தப் புகாரைத் தாக்கல் செய்தார்.

புகாரின் பின்னணி மற்றும் காவல்துறையின் செயல்பாடு

திருமண மோசடி புகாரைத் தாக்கல் செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் சுதா அளித்த பரபரப்புத் தகவல்கள். ஒரு மாதத்திற்கு முன்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகார் எந்தக் காவல் நிலையத்திற்குச் சென்றது என்பதே தெரியவில்லை.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவில் (WCCB) புகார் கொடுத்ததையடுத்து, துணை ஆணையர் விசாரணை நடத்தினார். ஆனால், ரங்கராஜிடம் முறையாக விசாரணை நடத்தியதற்கான எந்தத் தகவலும் தெரியவில்லை. ஊடகங்கள் மூலமே விசாரணை நடந்ததாக அறிந்துகொண்டோம். துணை ஆணையர் அலுவலகத்தின் பின் வழியாக ரங்கராஜை போலீசாரே அனுப்பி வைத்ததாகத் தகவல் வந்தது. இது அதிர்ச்சியளிக்கிறது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டு ரங்கராஜ் ஜாலியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார். குழந்தையைக் கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டார். ஆனால், நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் என்பது அதிர்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நியாயமல்ல.

10-க்கும் மேற்பட்ட பெண்களை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு

இந்த விவகாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் பல பெண்களை ஏமாற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் வழக்கறிஞர் சுதா எழுப்பினார். மாதம்பட்டி ரங்கராஜ், 10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்துவிட்டதாக எங்களுக்குத் தகவல்கள் வந்துள்ளது. ஏமாற்றப்பட்ட மற்ற பெண்களும் எங்களை அணுகி உள்ளனர். அதற்கான ஆதாரங்களைச் சேகரித்து வருகிறோம்.

ஜாய் கிரிசில்டாவின் அச்சம்

இதையடுத்துப் பேசிய ஜாய் கிரிசில்டா, தனக்கும் தனது குழந்தைக்கும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதற்கு முழுமுதற்காரணம் மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்று பகிரங்கமாகத் தெரிவித்தார். புகார் குறித்து மாநில மகளிர் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.