கடந்த மாதம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,400 உயர்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
காலை மற்றும் மாலை விலை நிலவரம்
நேற்று முன் தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று காலை, தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.88,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,060-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று மாலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.89 ஆயிரம் என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,125-க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையும் உயர்வு
வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் அதிகரித்துள்ளது. இன்று காலை, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் மீண்டும் விலை உயர்ந்து, கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.167-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வுக்குக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.