தமிழ்நாடு

போரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கு: தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றம் உறுதியாக நிரூபிக்கப்படாததால், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

போரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கு: தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சென்னையை உலுக்கிய போரூர் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 8, 2025) உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சம்பவமும் தண்டனைப் பின்னணியும்

சம்பவம்: 2017-ஆம் ஆண்டு, சென்னை போரூர் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்து தூக்குத் தண்டனை விதித்தது. இந்த மரண தண்டனையை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்து வழக்கை தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு

தொடர்ந்து, தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் குற்றத்தை உறுதியாக நிரூபிக்க முடியாத காரணத்தால், தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.மேலும், அவரைச் சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாய் கொலை வழக்கில் விடுதலை

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்த தஷ்வந்த், அதே ஆண்டில் தனது தாய் சரளாவைக் கொடூரமாகக் கொலை செய்து தப்பிச் சென்றார். மும்பையில் பதுங்கியிருந்த அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். தாய் கொலை வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்தபோது, தஷ்வந்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறியதால், அந்த வழக்கிலிருந்தும் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறுமி கொலை வழக்கிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.