கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் புத்தொழில் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவதே திராவிட மாடல் அரசின் இலக்கு என பிரகடனம் செய்தார். இந்த இலக்கை அடைவதில் புதிய புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப்ஸ்) முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இந்த மாநாடு கோவையில் நடைபெறுவது மிகவும் பொருத்தமானது என்று தனது அறிக்கையைத் தொடங்கிய முதல்வர், இதுபோன்ற தொழில் மாநாடுகள் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் சாட்சியாக அமையும் என்றார். அமைதியான சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கக்கூடிய மாநிலத்தைத் தேடிதான் தொழில்துறையினர் வருவார்கள் என்றும், இந்தியாவில் தமிழ்நாட்டில் நிம்மதியாகத் தொழில் நிறுவனத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கையின் அடையாளமாகத்தான் இது போன்ற மாநாடுகள் நடைபெறுவதாகவும் பெருமிதம் கொண்டார்.
புதிய சிந்தனைகள் மற்றும் புதிய முயற்சிகள் தொழில்துறைக்குள் வரவேண்டும் என்பதற்கான முயற்சிகளைத் திராவிட மாடல் அரசு தொடர்ந்து செய்து வருகிறது. சமூக நீதி அடிப்படையிலான திராவிட மாடல் கொள்கையின் இலக்கு என்னவென்றால், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில்முனைவோர் விழிப்புணர்வு பரவ வேண்டும். பெண்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் என எல்லாப் பிறப்பு மக்களுக்கும் அரசின் உதவிகளும் திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆறு மடங்கு வளர்ச்சி: பெண்கள் தலைமை
மாநிலத்தில் புத்தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடைந்திருப்பது குறித்து புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்ட முதல்வர், தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கம் (TANSIM) தொடங்கப்பட்ட பிறகு, அதற்கு முன்னிருந்ததைவிட ஆறு மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் ஒன்றிய அரசு தரப்பில் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. எண்ணிக்கை அளவில் 2020இல் 2,000 ஆக இருந்த ஸ்டார்ட்அப் எண்ணிக்கை இப்போது 12,000-ஐத் தாண்டி உயர்ந்துள்ளது. இதில் தனக்கு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்தப் புதிய நிறுவனங்களில் சரிபாதி நிறுவனங்களுக்கு பெண்களே தலைமை ஏற்று நடத்துகின்றனர் எனத் தெரிவித்தார்.
உலகளாவிய புத்தொழில் புலமைப் பரவல் 2024இன் படி, ஆசிய அளவிலேயே 18ஆம் இடத்தில் சென்னை உள்ளது என்றும், புத்தாக்கத்தில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாட்டை அங்கீகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். முதலீடு திரட்டும் திறனும் கணிசமாக உயர்ந்துள்ளது. 2016ஆம் ஆண்டில் $1 மில்லியன் டாலராக இருந்த முதலீட்டு மதிப்பு 2024ஆம் ஆண்டில் $842 மில்லியனாக உயர்ந்திருப்பது, தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்றார். 2020 முதல் 2024 இறுதி வரை தமிழ்நாட்டிலிருந்து டிபிஐஐடி தளத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்கள் ஆண்டுக்கு 36% கூட்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன; இது தேசிய சராசரியான 11%-ஐ விட மூன்று மடங்கு அதிகம் என்று புள்ளிவிவரங்களைக் கொடுத்து வியக்க வைத்தார்.
சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சித் திட்டங்கள்
"எந்தத் துறையாக இருந்தாலும் எங்களுக்குச் சமூக நீதி முக்கியம்" என்று மீண்டும் வலியுறுத்திய முதல்வர், பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கும் புத்தாக்கம் சென்று சேர வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் என்றார். பட்டியல் இனத்தவர்கள் முதலீடுகள் தேவைப்படும் புத்தொழில் நிறுவனங்களையும் முதலீட்டாளர்களையும் இணைக்கும் நோக்கத்திலேயே இந்தச் சிறப்பு மாநாடு நடத்தப்படுகிறது.
40க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் இந்த மாநாட்டில், நாட்டிலேயே முதல் முறையாக 40 உலக நாடுகளின் பங்களிப்போடு ஒரு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு உள்ளது. மேலும், உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களான NVIDIA, Microsoft உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன.
மாநிலத்தின் புத்தொழில் மேம்பாட்டுக்கான வழிகாட்டுதல் நிதியாக, புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய துணிகர முதலீட்டு நிறுவனங்களுக்கு அரசு முதலீடு செய்யும் 'நிதியம்' தொடங்கப்படும். இது டான்சிம்-ஆல் நிர்வகிக்கப்படும் என்றும், உலக அளவில் முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கு இது வழி வகுக்கும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
கோவைக்கு ஜி.டி. நாயுடு பாலம்
மாநாட்டுக்குப் பிறகு, கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்நாட்டிலேயே அதிக நீளமான 10 கிலோமீட்டர் நீளமுள்ள அவிநாசி சாலை மேம்பாலத்தைத் திறந்துவைத்ததாக முதல்வர் தெரிவித்தார். அந்தப் பாலத்திற்குத் தந்தை பெரியாருடைய உற்ற கொள்கைத் தோழரும், இந்தியாவின் எடிசன் என அழைக்கப்பட்டவருமான ஜி.டி. நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மாதம் ₹125 கோடி செலவில் செம்மொழிப் பூங்கா, மிகப்பெரிய பெரியார் நூலகம், கிரிக்கெட் ஸ்டேடியம் எனப் பல திட்டங்கள் கோவைக்கு வரவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நகர்ப்புறமான கோவையின் வளர்ச்சிக்குத் துணை நிற்கக்கூடிய திராவிட மாடல் அரசின் பயணம் தொடரும் என்று கூறி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது உரையை நிறைவு செய்தார்.