K U M U D A M   N E W S

உலகின் தலைசிறந்த புத்தாக்க மையமாகத் தமிழகத்தைக் கட்டமைப்பதே திராவிட மாடல் கனவு.. கோவை புத்தொழில் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

கோவையில் நடந்த புத்தொழில் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதில் புத்தொழில் நிறுவனங்களின் பங்கை வலியுறுத்தினார். TANSIM மூலம் ஸ்டார்ட்அப்கள் ஆறு மடங்கு வளர்ந்திருப்பதாகவும், பாதியளவு நிறுவனங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

முதலீடுகளை ஈர்க்க 7 நாள் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 7 நாள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார். இன்று ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.