ஆவணி அமாவாசை.. ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்.. சதுரகிரியில் தரிசனம்.. திருவள்ளூரில் வழிபாடு

ஆவணி மாத சர்வ அமாவாசை முன்னிட்டு அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசனம் செய்தனர்.

Sep 2, 2024 - 14:00
Sep 3, 2024 - 10:24
 0
ஆவணி அமாவாசை.. ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்.. சதுரகிரியில் தரிசனம்.. திருவள்ளூரில் வழிபாடு
aavani amavasai devotees visit rameswaram

சிம்ம ராசியில் சூரியனும் சந்திரனும் இணைந்திருக்கும் நேரம் ஆவணி அமாவாசை.முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர அமாவாசை திதி ஏற்ற நாளாகும். இன்றைய தினம் ஆவணி மாதம் அமாவாசையை ஒட்டி ஏராளமானோர் தமிழ்நாடு முழுவதும் உள்ள புனித நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.  திருவள்ளூர் வீரராகவர் கோவிலில்,ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.இந்த நிலையில் அமாவாசை நாட்களில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து துதி  கொடுத்தால் மோட்சம் என்ற ஐதீகம் உள்ளது.இந்த நிலையில் இன்று  ஆவணி மாத சர்வ அமாவாசை முன்னிட்டு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் வந்திருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிவிட்டு தம்மோடு வாழ்ந்து பிறந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்து வருகின்றனர்.

பின்னர் கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி விட்டு சாமி மற்றும் அம்பாளை தரிசனம் பெற்று செல்கின்றனர்.மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி எந்த ஒரு குற்றச் செயலும் ஈடுபடாமல் இருப்பதற்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும்  பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மாதந்தோறும் பிரதோஷம் ,அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆவணி  மாத பிரதோஷம் மற்றும்  அமாவாசையை வரும் ஆகஸ்ட் 31  ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை  
மொத்தம் 4 நாட்களுக்கு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஆவணி மாத  அமாவாசை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  இருந்தும் வருகை தந்த ஏராளமான பக்தர்கள் கோவில் அடிவாரப் பகுதியில் குவிந்தனர். பின்பு காலை 6 மணி அளவில் சதுரகிரி கோயில் நுழைவு வாயில் திறக்கப்பட்ட நிலையில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சதுரகிரி கோவிலுக்கு காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே அனுமதி எனவும், இரவில் மலையில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும், நீரோடைகளில் குளிக்க அனுமதி இல்லை எனவும் வனத்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டடுள்ளது.


ஆவணி மாதம் அமாவாசையை ஒட்டி திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக இருந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று இந்த கோவில் குளத்தில் நீராடி  வீரராகவரை தரிசித்தால், கஷ்டங்கள் நீங்கும், தீராத நோய்களும் தீரும், செய்த பாவங்கள் தொலையும்.  செல்வமகள் சேரும் என்பது ஐதீகம். இதனால் ஒவ்வொரு அமாவாசை நாள்களில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் முதல் நாள் இரவே கோவிலில் வந்து தங்கி மறுநாள் குளத்தில் நீராடி வீரராகவரை தரிசனம் செய்து வழக்கம்.

இந்நிலையில் இன்று ஆவணி மாதம் அமாவாசை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் குளத்தில் நீராடி வீரராகவ பெருமாளை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து, தங்கள் நேர்த்திக் கடனை செய்தி வருகின்றனர் மேலும், இறந்த முன்னோர்களுக்கு குளக்கரையில் திதி கொடுத்தும் வழிப்பட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow