ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்... புதிய ஒப்பந்தம் கையெழுத்து..!
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் இரயில்களை தயாரிப்பதற்கான புதிய ஒப்பந்தம் ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.