வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா
ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் திராவிட நட்பு கழகத்தின் சார்பில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சு.ப.வீரபாண்டியன், கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, மற்றும் ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பொதுமக்களிடையே பேசிய திமுக துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.,யுமான ஆ.ராசா, வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருபவர் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார்.
திமுக தொடர்ந்து போராடும்
மத்தியில் ஆளும் பாஜக அரசு, வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து நாடாளுமன்ற அவையில் பேசுவது ஒன்றாகவும், சட்டத்திருத்த மசோதாவின் விதிகள் அதற்கு முரண்பட்டதாகவும் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர், இந்த மசோதாவை ரத்து செய்யும் வரை தொடர்ந்து திமுக போராடும் என தெரிவித்தார்.