தமிழ்நாடு

குறுக்கே வந்த நாய்...தலைகுப்புற கவிழ்ந்த கார்...உயிர் தப்பிய இளைஞர்கள்

தகவல் அறிந்து கே.கே. நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து உள்ளே சிக்கி இருந்த இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

குறுக்கே வந்த நாய்...தலைகுப்புற கவிழ்ந்த கார்...உயிர் தப்பிய இளைஞர்கள்
கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

சென்னை கே.கே நகர் ராஜன் சாலையில் இன்று அதிகாலையில் ஜெத்தின் என்பவர் அவரது நண்பர் அருண்குமார் என்பவரோடு திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்றார். அப்போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால், கட்டுப்பட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து கார் விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து கே.கே. நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து உள்ளே சிக்கி இருந்த இருவரையும் பத்திரமாக மீட்டனர். தலைகுப்புற கவிழந்த காரை சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு திருப்பி போட்டு காவல் நிலையம் எடுத்துச் சென்றனர்.

போலீஸ் விசாரணை

நாய் குறுக்கே வந்ததால் பிரேக் அடிக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரில் மோதி தலைக்குப்புற விழுந்து விபத்து ஏற்பட்டது கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.