கடும் வெயில்
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் சமீபத்தில் கோடை மழை பெய்தது. இதனால் சற்று குளிர்ச்சியான சூழல் நிலவியது.ஆனால் அதைத்தொடர்ந்து வெயில் கடுமையாக உள்ளதால் மதிய நேரத்தில் மக்கள் வெளியில் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக மதிய வேலையில் மக்கள் தேவையின்றி வெயிலில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் குளிர்ச்சியான பழ வகைகளை சாப்பிட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மின் சேவை பாதிப்பு
வெயில் கடுமையாக வாட்டி வரும் நிலையில், மின்சாரம் இல்லையென்றால் வீட்டில் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் பகுதிக்கு 33 கிலோ வாட் திறன் கொண்ட உயர் அழுத்த மின்சார கேபிள் பூமிக்கு அடியே மதுரவாயல் துணை மின் நிலையத்திற்கு மின் சேவைக்காக கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில், கோயம்பேடு நெற்குன்றம் சாலை பகுதியில் பூமிக்கு அடியில் வரும் கேபிளில் ஏற்பட்ட பழுது காரணமாக நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மின்வெட்டு ஏழு மணி நேரத்திற்கு மேல் தொடர்வதால் மதுரவாயல், எம்எம்டிஏ காலனி, ஆலப்பாக்கம், மேட்டுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மின் சேவை இல்லாமல் ஆயிரக்கணக்கான வீடுகளில் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
பொதுமக்கள் அவதி
கோடை காலத்தில் ஏற்பட்ட மின்வெட்டால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர். இது தொடர்பாக கோயம்பேட்டில் பழுது ஏற்பட்ட பகுதியை கண்டறிந்து ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் எடுத்து பழுதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இன்னும் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரத்தில் பழுது சீர் செய்யப்பட்டு மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏழு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.